கொங்குநாட்டுப் பெருங்கற்காலச்சின்னங்கள்



கொங்குநாட்டுப் பெருங்கற்காலச்சின்னங்கள்
இரா.பூங்குன்றன் 21-7-2013
மலைகள் சூழ்ந்த கொங்கு நாட்டில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் பரவலாக கிடைக்கின்ற பெருங்கற்காலச் சின்னங்களை வைத்து மக்கள் கால்நடை வளர்ப்பு மணி செய்யும் கல் வளங்களை கண்டறிந்து மேலை நாடுகளுக்கும் வடபுலத்திற்கும் ஏற்றமதி செய்துள்ளனர். கல்வட்டங்களும், தாழிகளும், கல்பதுக்கைகளும், குத்துக்கற்களும் பெருங்கற்கால சின்னங்களாக கருதப்பெறுகின்றது. பெருங்கற்ச் சின்னங்களில் இரும்பு வில், இரும்பு அம்புகள், நீண்ட கத்திகள்(12 அடி) அகழ்ந்தெடுக்க பெற்றுள்ளன. மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. மேலும் ஒரு மானின் எலும்புக் கூடு ஒன்று கண்டெக்கப் பெற்றுள்ளது. அந்த எலும்புக் கூடுகளுடன் 700 கல்மணிகள் (கார்னீலியன்) கிடைத்துள்ளன. இவை மட்டுமின்றி 2500 மணிகள், 1000 மணிகள், 800 மணிகள், 700 மணிகள், 601 மணிகள், வெவ்வேறு பெருங்கற்காலச் சின்னங்களில் கண்டுபிடிக்க பெற்றுள்ளன. கருப்பு சிவப்புப் பானை ஓடுகள், சங்க்கால பானைகள் கருப்பு பானை ஓடு அழகோட்டுவங்கள் வரையப் பெற்ற பானை ஓடுகள் கண்டெக்கப் பெற்றன. பித்தாளையால் செய்யப் பெற்ற புலி உருவம், நெல், கேழ்வரகு ஆகிய தானியங்கள் உரோமனிய காசுகள், முத்திரைகாசுகள் ஆகியவை பெருங்கற்காலச் சின்னங்களில் வைக்கப்பட்டிருந்தன. தஙகஅணிகலன்கள் கிடைக்கத்துள்ளது. பெருங்கற்காலச் சின்னங்களில் எழுத்து ஓடுகளும், குறியீட்டு ஓடுகளும் கிடைத்துள்ளன.

இக்கட்டுரை விழுப்புரம் KCP திருமண மண்டபத்தில் 23வது ஆவண வெளியீட்டு விழாவில் நேர்காணலில் அவர் எழுதி தந்தது.
நன்றி திரு. இரா.பூங்குன்றன் ஐயா அவர்களுக்கு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்