ஜூன் 18, 2015

சேரர் வரலாறு

சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அக்கால மக்களின் அக வாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் ஒருவாறு அறிய முடிகின்றது. அரசர், அரசியர், புலவர்கள், மக்கள், அரசுமுறை, போர்முறை, கொடைத்தன்மை, பழக்கவழக்கங்கள், நாடு, எல்லைகள் ஆகியவற்றை உய்த்துணர முடிகின்றது.
சேரர் - சொல்லும் பொருளும்
இராமாயண காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர் களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும் போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.
கிரேக்கத் தூதரான மெகஸ்தனீஸ் என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.
திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும் சொற்களே வழக்கில் வந்தனவாகும்.
அசோகனது கல்வெட்டுகளை நாம் நோக்கும்போது சேர புத்திரர் என்பதைக் கேரளபுத்திரர் என்றே வடமொழி அறிஞர்கள் படித்து வந்துள்ளனர். கல்வெட்டில் உள்ள பிராமிய எழுத்துகள் சேரலபுத்திரர் என்று படிக்கும் வண்ணமும் உள்ளது. அதைப் படித்த அறிஞர்கள் கேரளபுத்திரர் என்றே படித்து வந்ததனால், பிற்கால அறிஞர்களும் கேரளபுத்திரர் என்றே கூறிவந்தனர்.
இதனால் நாம் அறிவதாவது சேரலர் தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலமானது. தமிழ்மொழியானது சிதைந்து மலை யாளமாக மாறிய காலமாயிருக்கலாம். கேரளர் என்னும் சொல்லானது
கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் மாறிற்று என்று உரைக்கத்தக்க வகையில், கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலச் சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் கல்வெட்டுகளில் கேரளாந்தகன்1 என்றே குறிப்பு உள்ளது. இன்றும் தென்னாட்டில் சிலர் தங்களது ஊர்களை வடவரிட்ட பெயராலேயே அழைத்து வருதல் காணலாம். இது வட மொழியின்மீது உள்ள பற்றினால் எழுந்ததே ஆகும். இந்த வகையில் கேரளம் எனும் சொல் வழக்கினையே பெரிதும் விரும்பி வழங்கி வந்தனர்.
நாடும் எல்லைகளும்
சேர மன்னர்களைக் கூறும் முக்கியச் சங்ககால நூல்களை நோக்குவோமானால் நாட்டினது பரப்பும் அதன் எல்லைகளும் குறிக்கப் பெறும். பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு. சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பார்ப்போமாயின் சேர நாட்டில் அடங்கியுள்ள பகுதிகள் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்ற நாடு, மலைநாடு, கொங்கு நாடு, பொறைநாடு, முதலியன ஆகும். இதில் அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, அகப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய இடங்களும் அடங்கும். பல அரசர்கள் வஞ்சியையும், சிலர் மாந்தையையும் தலைமைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் இவ் வஞ்சி நகரைப்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுள்ளது. ‘சேரன் வஞ்சி’ எனும் சிறந்த நூலை எழுதிய சா. கிருட்டினசாமி என்பார் சேர நாட்டில் பெரியாறு என்னும் ஆற்றின் அருகில் உள்ள கரூர்ப்பட்டினமே சேரர்களது வஞ்சிமாநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இதையே திரு கனகசபைப் பிள்ளையவர்களும், திரு. கே. ஜி. சேஷய்யரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கொங்கு நாட்டில் உள்ள கரூர் ஆனிலை என்ற நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் பிற்காலச் சேரர்களே வென்று தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு அதற்குச் ‘சேரர் கொங்கு’ என்ற பெயரும் வழங்கினர். எனவே, சேர நாட்டில் உள்ள கரூர்ப்பட்டினமே சங்கநூல்களில் கூறப்பெரும் வஞ்சிமா நகரம் எனக் கொள்ளவேண்டும். இவர்களது நல்லாட்சியை ஓரளவு உறவுமுறையுடன் தெரிந்துகொள்ள மேற்கூறிய நூல்கள் துணைபுரிகின்றன. அவற்றை ஒரு முறைப்படுத்தித் தெளிவான முறையில் நோக்கினால் அவர்களது வரலாற்றை அறியமுடியும்.பதிற்றுப்பத்து என்னும் நூல் சேரஅரசர்கள் பதின்மரும் அவர் களது உறவுமுறைகளும் தெரிந்துகொள்ள முழுதும் பயன்படுகிறது. இந்தப் பதின்மரின் வரலாற்றை முதலிலும் பின்னர் ஏனைய நூல்களில் காணப்படும் மற்றச் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம். இதையே சேர அரசர்கள், பிற சேர அரசர்கள், அரசப் புலவர்கள் என்னும் தலைப்புகளின் கீழும் காணலாம்.
பதிற்றுப்பத்து என்பது சங்ககால நூல்களில் ஒன்று. இது ஒரு தொகுப்பு நூல். இதில் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற் றிருந்தன என்பது பதிற்றுப்பத்து என்னும் நூலின் பெயரால் தெரிய வருகிறது. ஒவ்வொரு புலவரும் ஒவ்வோர் அரசனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அந்தப் பாடல்கள் முதற் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் முறையில் எண் குறியீட்டுப் பெயரால் தொகுக்கப் பட்டுள்ளன. இவற்றுள் முதல் பத்தும் பத்தாம் பத்தும் இதுவரை கிடைக்கவில்லை. இடையிலுள்ள எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.
கிடைத்துள்ள இந்த எட்டுப் பத்துகளில் எட்டுப் புலவர்கள் எட்டுச் சேர அரசர்களைப் பாடியுள்ளனர்.
இந்த எட்டுப் பேர்களில் ஐந்துபேர் ஒரு கால்வழியினராகவும், எஞ்சிய மூன்றுபேர் மற்றொரு கால்வழியினராகவும் இருந்தவர்கள் என்னும் உண்மையைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியரின் பதிகக் குறிப்பு வாயிலாக அறிகிறோம்.
பத்துப் புலவர்களின் பாடல்களை ஒன்றுதிரட்டிப் பதிற்றுப் பத்து என்னும் பெயருடன் நூலாக்கிய தொகுப்பாசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. எனினும், அந்தப் புலவரும் சங்க காலத்தவரே ஆவார். இந்தப் பதிற்றுப்பத்து நூலைச் சங்க நூல்களில் இறுதியாகத் தோன்றியவற்றுள் ஒன்று எனச் சிலர் கூறுகின்றனர். எனவே, பதிற்றுப் பத்துச் சேர அரசர்களைப் பற்றி இவர் தரும் பதிகச் செய்திகளை நாம் வரலாற்று உண்மை.
பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்துப் பாடல்களைப்பற்றியும் பதிகம் என்னும் பெயரில் சில தெளிவான உண்மைகளைத் தெரிவிக்கின்றார். இந்தத் தொகுப்பாசிரியர் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் இட்டுள்ளார்; இன்னின்ன சிறப்புப் பெயர் கொண்ட பாடல்கள் இன்னின்னபத்தில் அடங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்தப் பத்துப் பாடல்களையும் பாடிய புலவர் இன்னார் என்பதும், அவரால் பாடப்பட்ட அந்தப் பத்து
இன்ன சேர அரசனைச் சிறப்பித்துக் கூறுகிறது என்பதும், அந்தச் சேர அரசன் இன்னார்க்கு இன்னஉறவுமுறையினன் என்பதும் அவரது பதிகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மற்றும் இந்தப் புலவர் அந்தச் சேர அரசனை இந்தப் பத்துப் பாடியதற்காக இன்ன பரிசுபெற்று இவ்வாறு சிறப்பிக்கப்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அரசன் இத்தனை ஆண்டுகள் அரசனாய் விளங்கினான் என்னும் செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். நாம் இந்தச் செய்திகiள யெல்லாம் வரலாற்று உண்மைகள் என்றே கொள்ளவேண்டும்.
உதியன் கால்வழி
பதிற்றுப்பத்தில் இரண்டு கால்வழியைச் சேர்ந்த அரசர்கள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர் என்று கூறினோம். அவற்றுள் ஒன்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும், அவன் தம்பியையும், ஆண் மக்கள் மூவரையும் கொண்ட ஒரு கால்வழியாகும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்று கூறப்பட்டுள்ளான். இந்த உதியஞ்சேரலுக்கு முன்னோன் என்று சான்றுடன் இவனது கால் வழியில் கூறத்தக்கவர் யாரும் தெரியவில்லை. ஆதலால், இந்தக் கால் வழியை நாம் உதியன் கால்வழி என்று குறிப்பிடலாம். இந்த வகையில் உதியன், உதியன் மகன் நெடுஞ்சேரலாதன், நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன், நெடுஞ்சேரலாதனின் மக்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற முறையில் ஆறு சேர அரசர்களை நாம் அறிய முடிகிறது.
அந்துவன் கால்வழி
மற்றொரு கால்வழி மூன்று அரசர்களைச் சிறப்பித்துப் பாடுகிறது என்று கூறினோம். இந்த மூவருள் முன்னவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவான். இவன் தந்தை அந்துவன் என்று கூறப்படுகிறான். எனவே, இவர்களது கால்வழியை அந்துவன் கால்வழி என்று குறிப் பிடலாம். இந்த வகையில் அந்துவன் கால்வழி அரசர்கள் நான்குபேர்
ஆவர். அந்துவன், அந்துவன் மகன் செல்வக்கடுங்கோ, செல்வக்கடுங் கோவின் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை, மற்றும் குட்டுவன் இரும் பொறை ஆகியோரே அந்த நால்வர். இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறையையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இந்த மாந்தரஞ்சேரல் கால்வழி அரசர்கள் ஐவர் எனக் கொள்ளலாம்.
இந்த ஐந்து அரசர்கள் பெயரிலும் ‘பொறை’ என்னும் அடைமொழி உள்ளது. இதனால் இவர்களைப் `பொறையர்க்குடி அரசர்கள்’ என்று குறிப்பிடுதலும் உண்டு. பொறை அரசர்கள் என்று நோக்கும்போது, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. மாந்தரன் பொறையன் கடுங்கோ முதலான அரசர்களையும் ஒன்றுசேர்த்து எண்ணவேண்டும்.
இனி, நாம் மேலே கண்டவாறு உதியன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆறு பேர், அந்துவன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் நான்கு பேர். ஆக மொத்தம் பத்துச் சேர அரசர்களைச் சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காண்கிறோம்.
இந்தப் பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைப் பதிற்றுப்பத்து என்னும் நூலை அடிப்படைச் சான்றாகக்கொண்டு நாம் ஆராயும்போது, புறநானூறு, அகநானூறு முதலான பிற சங்கப் பாடல்களிலிருந்தும், சங்ககாலக் கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவரும் செய்திகளையும் ஆங்காங்கே இணைத்துக் காண்கிறோம். பின்னர், முறையே பிற நூல்களில் காணும் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் காண்போம்.
உதியஞ்சேரல்
உதியஞ்சேரல்1 செங்குட்டுவனின் பாட்டன்.2 வீரமும் கொடையும் இவனது வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.
போர்த்திறன்
‘நாடுகண் அகற்றிய உதியஞ்சேரல்’3 என்று இவன் குறிப்பிடப் படுகின்றான். நாட்டின் பரப்பை விரிவாக்கினான் என்பதே இதன் பொருளாகும். இதனால், இவன் தன் முன்னோரிடமிருந்து நாட்டுப் பகுதி
ஒன்றைப் பெற்றிருந்தான் என்பது தெளிவாகிறது. இவன் முன்னோர் சேர அரசர்களாய் முடியாட்சி புரிந்து வந்தனர் என்பது விளங்குகிறது.
பேய்க்குப் பெருஞ்சோறு
உதியஞ்சேரல் நாட்டின் பரப்பை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். இதனால், அவன் பகைவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டனர். ‘முதியர்’ என்னும் குடியினர் பாண்டியர்க்குப் பகைவர்; சேரருக்கு நண்பர்.4 முதியர் குதிரைப் படையில் சிறந்து விளங்கினர். இந்தக் குடியினரைப் பகைவர்கள் தாக்கினார்கள். முதியர்களில் பலர் மாண்டனர். செய்தி அறிந்த உதியஞ்சேரல் முதியர்களுக்குத் துணை வந்தான். பகைவர்கள் பலர் மாண்டனர். அவர்களின் உடல் குறுகியதும், நெடியதுமாய் வீழ்ந்து பல பேய்கள் கூட்டத்திற்குப் பெருஞ்சோறாய்5 அமைந்தன.
கொடை நலம்
இவனைப் பாடிக்கொண்டு புலவர்கள் பலர் சென்றனர். அவர்களெல்லாம் மனம் மகிழும்படி இவன் கொடை வழங்கினான். இவனை மாமூலனார் ‘உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர்’6 எனவும் ‘தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்’7 எனவும் அவன் கொடை வழங்கிய காட்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
குழுமூர்ச் சோற்றுமடம்
குழுமூர் என்பது ஓர் ஊர். அவ்வூரில் வாழ்ந்தவர்கள் ஆடு மாடு மேய்த்து வாழும் ஆயர்கள். இவ்வூரைச் சூழ்ந்த பகுதியில் ஆங்காங்கே குன்றுகளும் நிழல் தரும் மரங்களும் உண்டு. ஆயர்கள் ஆங்காங்கே அம் மரநிழல்களில் தங்குவர். அதுவே உதியனின் சோற்றுமடமாகும்.8 ‘உதியன் அட்டில்’ என்றும் இது வழங்கப்பட்டது. இதற்குக் கைம்மாறாக இவன் ஆயர்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. இந்த மடத்தில் உணவு உண்ணும் ஒலி, அருவியில் ஒலிக்கும் ஒலியின் எதிரொலிபோல் கேட்டது.
பண்புநலம்
இவன் குற்றமற்ற சொற்களையே பேசுவான்; உண்மையே பேசுவான். ‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந் தீமை இலாத சொலல்’ என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான் என்று கூறலாம்; கொடை வழங்குதலைத் தன் கடமை என எண்ணிச் செய்தான்; கோணாத தன் நெஞ்சு விரும்பியவாறு செய்தான். நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்னும் ஐம்பெரும் பூதங்களின் இயற்கைக் குணங்களாகிய பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளி போல் இவன் தனக்குப் பகைவர் பிழை செய்தபோது அப் பிழையைப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும், அவ்வாற்றலால் அவரை அழித்தலும். அவர் வழிபட்டால் அவருக்குச் செய்யும் அருளும் உடையோனாவான்.9
இசை வேட்கை
இவன் இனிய இசையுடன் முரசுகளை முழக்கி மகிழ்வது உண்டு என்பது ‘இன்னிசை முரசின் உதியஞ்சேரல்’ 10 என்று குறிப்பிடுவதால் தெரிகிறது. இவன் போர் புரியும்போது இயவர்கள் (இசைக் கருவிகள் முழங்குவோர்) ஆம்பலங் குழல்களால் ஊதினார்கள்.11
மனைவி மக்கள்
இவனது மனைவி நல்லினி ஆவாள். இவள் வெளியன்வேள் என்பவனின் மகள் ஆவாள். இவனுக்கும் நல்லினிக்கும் பிறந்த ஆண் மக்கள் இருவராவர். மூத்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; இளையவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆவான்.12
ஒப்புநோக்கம்
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பாரதப்போரில் இருதரத்துப் படை களுக்கும் சோறு வழங்கினான். அவன் வேறு, இவன் வேறு. அவனைப் பற்றிய செய்தியினைப் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம்.
நெடுஞ்சேரலாதன்
சங்ககாலத்தில் சேரலாதன் என்னும் பெயர்கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம்.
நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு முதுகில் காயப்பட்ட தற்காகப் போர்க் களத்திலேயே வடக்கிருந்து உயிர்நீத்தான். சேரவேந்தர்களைச் சிறப்பித்துப் பாடும் பதிற்றுப்பத்து என்னும் நூலில் நெடுஞ்சேரலாதன் இரண்டாம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளான்.
போர்த்திறம்
கடம்பறுத்தல்:அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேர லாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத் தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துணடால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு செய்துகொண்டான்.
கடம்பை வெட்டி வீழ்த்தும்படி நெடுஞ்சேரலாதன் ஏவினான் என்று ஒரு பாடல் கூறுகிறது.5 இவனது மகன் செங்குட்டுவன் கடம்பறுத்தவன்
என்று சிறப்பித்துப் பாராட்டப்படுகிறான். எனவே, நெடுஞ்சேரலாதன் இந்தப் போரில் தானே நேரில் ஈடுபடாமல் தன் மகனை அனுப்பி வெற்றிகொண்டானோ என எண்ண வேண்டியுள்ளது.
அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட் பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப் பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத் தீவுகளில் அதற்கு முனனர் ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்.6 மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப் போரில் ஈடுபட்டான்.7
கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும். இமய மலையில் வில்லைப் பொறித்த செயலும் இணைத்துப் பேசப்படுகின்றன.8 ஓரிடத்தில் செங்குட்டுவனை ‘வாய் வாட்கோதை’ என்று குறிப்பிட்டு, கடம்பு எறிந்ததும் வில் பொறித்ததும் அவனது செயல்கள் என்று கூறப்படுகின்றன.9 ஓரிடத்தில் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் கண்டு வாழ்த்தும் பராசரன் எனும் பார்ப்பான் கடம்பு எறிந்ததும், இமயத்தில் வில்லைப் பொறித்ததுமாகிய செயல்களை அவனது செயல்கள் என்று கூறுவதைக் காண்கிறோம்.10

6. பதிற். 20 : 3 முரணியோர்
7. காவல் மரத்தின் அடிப்படையில் குடிமக்களுக்குப் பெயர் அமைந்தமைக்கான சான்றுகள் இல்லை. பாண்டியர் காவல் மரம் வேம்பு. அவர்களை வேம்பர் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. இவ்வாறே புன்னை, அத்தி, பனை முதலான மரங்களைக் காவல் மரமாக உடைய நாட்டு மக்களும், அவ்வகை மரப் பெயரால் அழைக்கப்படுவதில்லை. ‘கடம்பர்’ என்னும் சொல் நமக்கு யாண்டும் ஆட்சியில் இல்லை. தக்கணத்தில் இருந்த கதம்பர் வேறு. அரபிக் கடல் தீவுகளில் கடப்ப மரத்தைக் காவல் மரமாகக் கெண்டிருந்த அரசு வேறு. பாடல்களில் கடம்ப வெட்டப்பட்டது என்று மட்டுமே உள்ளது. அறிஞர்கள் கடம்பர்களை ஓட்டினான் என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் கடற்கொள்ளைக்காரர்கள் என்றும், மேலைநாட்டு வாணிகக் கப்பல்களை வழிப்பறி செய்து வந்தனர் என்றும், வழிப்பறியைத் தடுக்கும் முயற்சியில் நெடுஞ்சேரலாதன் இப்போரில் ஈடுபட்டு வெற்றிபெற்றான் என்றும் கூறுகின்றனர். இவற்றிற்குச் சான்றுகள் இல்லை. ஆய்வுக்குரியன
இவற்றிற்கு மாறாகக் கடம்பு எறிந்த அரசன் கண்ணகிக்குக் கல்நாட்டு விழா நடைபெற்றபோது உயிருடன் இல்லை என்று குறிப்பிடுவதையும் காண்கிறோம்.11
ஓரிடத்தில் யவனரைப் பிணித்தவன் என்றும். பாரதப் போரில் சோறு வழங்கியவன் என்றும், கடம்பறுத்தவன் என்றும் மூன்று வரிப் பாடல்கள் சேரனை வாழ்த்துதல் என்னும் ஒரு பொருள்மேல் அடுக்கி வந்துள்ளன.12 இச் செய்தியைப் பொதுப்படையாகக் குறிப்பிடும் இடமும் உண்டு.13
இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பார்க்கும்போது கடம்பு எறிந்தவன் நெடுஞ்சேரலாதன் என்பதையும், அவனது அச் செயல்களுக்கு உறுதுணையாகச் செங்குட்டுவனும், மாந்தரஞ் சேரல் இரும்பொறையும் இருந்தார்கள் என்பதையும் நாம் அறிகிறோம்.
வன்சொல் யவனர் பிணித்தல்
கடம்பு தடிந்த போர்ச்செய்தி, நெடுஞ்சேரலாதனைச் சிறப்பிக்கும் பதிகத்தில் கூறப்படவில்லை. பதிகத்தில் யவனரைப் பிணித்ததாகக் கூறப்படும் செய்தி, பாடல்களில் கூறப்படவில்லை. எனவே, கடம்பு தடிந்தது போரின் விளைவே. ‘வன்சொல் யவனர்’14 என்று குறிப்பிடப் பட்டுள்ளவர் கடம்பு தடிந்த போரில் பிடிபட்ட போர்க் கைதிகள் எனலாம். இந்தப் போர்க் கைதிகளைப் பிணித்துக்கொண்டு வரும் போது அவர்களுடைய கைகளைப் பின்புறத்தில் சேர்த்துக்கட்டியும், தலையில் நெய்யை ஊற்றியும் அழைத்து வந்தனர். போர்க் கைதிகளை இவ்வாறு அழைத்துவருவது கிரேக்கர் மரபு. நெடுஞ்சேரலாதன் சார்பில் அழைத்து வந்த செங்குட்டுவன் பகைவரின் மரபுக்கு மதிப்பளித்து அழைத்து வந்தான்.15
.
பிணிக்கப்பட்ட யவனர்கள் யார் என்பதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. மேலைநாட்டுக் கடல் வாணிகராகிய யவனர்கள் என்று சிலரும், வடநாட்டில் வாழ்ந்த சாக யவனர் என்று சிலரும் கருதுகின்றனர். சாக யவனரின் கூட்டத்தார் என்று கூறும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வெளிநாட்டுச் செலாவணியில் நாட்டின் பொருளியலை வளப்படுத்திய மேலைநாட்டு வாணிகக் குழுவினராகிய யவனரைப் பிணித்தான் என்பது பொருந்தாது என்கிறார். வடநாட்டு யவனர் வடுகரைப் போன்றும். ஆரியரைப் போன்றும் நேரே தமிழகத்தில் ஊடுருவாமல் அரபிக்கடல் தீவுகளுக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பது மறுசாரார் கருத்து. இந்தக் கருத்துகள் உய்த்துணரப்பட்டவையாகத் தென்படுகின்றன.
யவனர் யாவர் என்பதை, கிடைக்கும் அடிப்படைச் சான்றுகளை வைத்துக்கொண்டு தீர்மானிப்பதே நல்லது. யவனரின் பாவை விளக்கு,16 அன்ன விளக்கு,17 கட்குடம்18 ஆகியவை சிறப்பு மிக்க பொருள்கள் எனப் பேசப்படுகின்றன. யவனரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றதையும் நாம் காண்கிறோம்.19 இதனால் இவர்கள் பிற நாட்டிலிருந்து கடல் கடந்து வந்த வாணிகர்கள் என்பது தெளிவாகிறது. இவர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின்பொருட்டு வந்திருந்து தங்கியிருந்ததையும் நாம் காண்கிறோம்.20 மதுரை நகரில் யவனர்கள் வாளைக் கையில் ஏந்திக்கொண்டு கோட்டை வாயிலில் காவல்புரிந்து வந்ததைக் காணும்பொழுது.21 யவனர்கள் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்தனர் என்பதை அறிகின்றோம். இவ்வாறு தங்கியவர்களில் புகார் நகரில் தங்கியவர் மாடமாளிகைகளில் வாழ்ந்ததையும், மதுரையில் தங்கியவர் கோட்டையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததையும் நாம் பார்க்கிறோம்.
சேர அரசன் ஒருவன் யவனர்களின் வளநாட்டை ஆண்டான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.22 இந்த அரசன் இந்த யவனர் நாட்டுடன் தென்குமரி, இமயம் ஆகிய எல்லைக்குட்பட்ட நாட்டையும் ஆண்டான் என்று அங்குக் கூறப்பட்டுள்ளது. யவனர் நாடு தென்குமரி,
இமயம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டதென்பது விளங்காத காரணத்தால் அந்தச் சேர அரசன் ஆண்ட யவனர் நாட்டையும் இதனுடன் இணைத்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த யவனர் நாடு எது?
மேலே கூறியபடி தென்குமரி, இமயம் இவ்விரு எல்லைக் குட்பட்ட நாட்டை ஆண்ட சேர அரசன் நெடுஞ்சேரலாதன்.23 இவன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வீழ்த்தினான். கடப்ப மரம் மேற்குக் கடற்கரையை அடுத்த தீவுகளில் 24 இருந்த காவல் மரம். இந்தக் காவல் மரத்தை உடையவர்கள் அந்தத் தீவு மக்கள். மேலை நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியே கலம் செலுத்தி வாணிகம் செய்துவந்த யவனர்கள் இந்த இலக்கத் தீவுகளில் தங்கினார்கள். அங்கிருந்த மக்களைத் தம் வாணிகத்திற்குத் துணையாகக் கொண்டனர்.
சேர நாட்டில் இவர்கள் செய்துவந்த வாணிகத்தில் ஏதோ ஒரு வகையில் தவறு நேர்ந்திருக்கலாம். அந்தத் தவற்றுக்குக் கடம்புத் தீவுகளிலிருந்த மக்களும் உடந்தையாயிருந்திருக்கலாம். அரசன், தவற்றினைத் திருத்த அவர்களோடு போரிடவேண்டியதாயிற்று. இந்தப் போரின் விளைவுதான் காவல் மரமாகிய கடப்பமரம் வெட்டியதும். அதனால் முரசு செய்துகொண்டதும், யவனரைக் கைது செய்து கொண்டு வந்ததும், பிறகு அவர்களது செல்வத்தைச் சேரநாட்டு மக்களுக்கு வழங்கியதும் ஆகிய நிகழ்ச்சிகளாகும்.
இமயம் வரை வெற்றி
நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர்குடிச் சின்ன மாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப் பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த மன்னர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ணவேண்டியுள்ளது.
குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி இவனது
வரலாற்றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகையால், குமட்டூர்க் கண்ணனார் பாடலில் இடம்பெறாவிட்டாலும் சேர்க்கப்படவேண்டும் என்னும் கருத்து உடையவராய்ப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியர் தம் பதிகத்தில் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் யவனரைப் பிணித்த நிகழ்ச்சியை இமயத்தில் வில் பொறித்த நிகழ்ச்சிபோல் அல்லாது பாடல் பாடப்பட்ட காலத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சி என்றாலும் நெடுஞ்சேரலாதன் காலத்து நிகழ்ந்தது என்று கூறினோம். அதற்கு முதன்மைக் காரணமாவது கடம்பறுத்த முக்கிய நிகழ்ச்சியானது பதிகத்தில் விடுபட்டபோதிலும் பதிகத்தில் காணப்படும் யவனரைப் பிணித்ததாகிய தொடர்நிகழ்ச்சியில் வேறுவகையில் பதிகத்தில் கூறப்பட்டுள்ளது என்று கொண்டதே ஆகும்.
இமயம் நோக்கிச் சென்றபோதும், அங்கிருந்து தன் நாட்டை நோக்கி மீண்டபோதும் நெடுஞ்சேரலாதன் பல மன்னர்களை வென்றான். இந்த வெற்றிகளில் ஆரியரை அடிபணியும்படி செய்த செயல் பதிகத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றிச் செய்திகள் பதிற்றுப்பத்துப் பாடல்களிலும்25 கூறப்பட்டுள்ளன.
இவனது வடநாட்டுப் போரில் பல அரசர்களை வென்றான்; ஆயினும் அவர்களது நாடுகளைக் கைப்பற்றிக் கொள்ளவில்லை. இதனைச் சமுத்திரகுப்தனின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு ஒப்புமையாகக் காட்டலாம். இமயம் சென்ற வழியில் சிலர் நெடுஞ்சேரலாதனைவிட அவர்களது அரசர்கள் மேம்பட்டவர் எனப் புகழ்ந்து கூறினர்.26 அவர்களது பேராற்றல் அழியும்படி வென்றான். இவ்வாறு புகழ்ந்து கூறியதால் பேராற்றல் அழிக்கப்பட்டவரே ஆரியர். இவனது இமயப் படையெழுச்சி வடநாட்டு அரசர்களின் வரலாற்றில் எங்கும் காணப்படாமைக்கு இதுவே காரணமாகும்.
இமயத்தில் வில்லைப் பொறித்தான் என்று கூறும் பதிகம் அப் பகுதிகளில் தமிழகத்தின் பெயர் விளங்கும்படி தன் கோலை நிலை நாட்டினான் என்றும் கூறுகிறது.27 கோலை நிலைநாட்டினான் என்றால் ஆட்சியை நிலைநாட்டினான் என்பது பொருள். தமிழ்நாட்டு வரலாற்றில் ஆட்சியை நிலைநாட்டுதல் என்பது அரசாளுதலை
மட்டும் குறிக்கும் சொல் அன்று. பிறர் பணிந்து கொடுத்துப் பின்னர் மீண்டாலும் திறை தந்த நாடு. திறைபெற்ற மன்னனின் ஆட்சிக்குக்கீழ் இருந்ததாகவே கருதப்படும்.28
இந்த வகையில் நெடுஞ்சேரலாதன் இமயமலைப் பகுதியில் ஆட்சியை நிலைநாட்டினான் என்று பதிகம் கூறுவதாவது, இமயம் முதல் குமரிவரை வென்றான் 29 என்று பொருளாகும். எல்லை காண முடியாத அளவுக்கு இவன் நாடு விரிந்தது 30 என்ற பாடற் கூற்றுகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மைகளேயாகும்.
நெடுஞ்சேரலாதனின் போர்முறைச் செய்திகள்
‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’ 31 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’ 32 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.
இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;33 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;34 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.35 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந் தான்.36 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.37 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.38 படைகளைத் தழுவிச் செல்லும் முறையில் படையின் கவசமாக விளங்கினான்.39 வெற்றிக்கொடி நாட்டும் படையை ஏராகக் கொண்டு இவன் பகைவர்களாகிய நிலத்தை உழுபவன்.40 இவ்வகைச் செய்திகள்
எல்லாம் இவனது படைஎழுச்சி நிலையைக் காட்டுகின்றன. படையில் இருந்த இயவர்கள், உலகமெல்லாம் பாதுகாப்புக்காக இவனுடைய குடை நிழலின் கீழ் வரவேண்டும் என்று கூறி வெற்றி முரசினை முழக்கினர்.41
இவன் படையெடுத்துச் சென்றபோது கூளியர்கள் காட்டுப் பாதைகளில் படைசெல்ல வழி அமைத்துக் கொடுத்தனர். இதற்கு மாறாக நெடுஞ்சேரலாதன் வெற்றிபெற்ற நாடுகளில் உணவுப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டனர். வயவர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு ஏந்திச் சென்றனர். முரசு முழக்குவோர் குருதிபாயும் போர்க்களத்தைக் காணும் விருப்பத்தோடு செந்தினையில் குருதியைக் கலந்து தூவிப் போர் முரசை முழக்கினர். இவனது படையினர் போருக்கெழுந்த நாள் முதல் போர் முடியும் நாள் வரை தம் போர் உடைகளைக் களைந்ததே இல்லை.42 இவ்வாறு இவனது படையெடுப்பு நிகழ்ந்தது.
நெடுஞ்சேரலாதன் தன் போர்ப் பாசறையில் நீண்டநாள் தங்கினான்,43 ஓர் ஆண்டுக்குமேல் தொடர்ச்சியாகத் தங்கியதும் உண்டு.44
போரில் இவன் பகைவர்களது மதில்களையும் கதவுகளையும் அழித்தான்;45 அவர்களது ஊர்களைத் தீக்கிரையாக்கினான்.46 வளமுடன் விளங்கிய பகைவரது நாடுகளும் இவனை எதிர்த்தமையால் அழிந்து தம் பொலிவை இழந்துபோயின.47 அரிமாக்கள் நடமாடும் இடங்களில் பிற விலங்குகள் தலைகாட்டாமைபோல நெடுஞ்சேரலாதன் தோன்றிய நாடுகளில் மன்னர்கள் ஒடுங்கினர்.48
தும்பைப் பகைவரை வெல்லுதல்
வடநாட்டில் இவனை எதிர்த்துத் தாக்கும் மன்னர்கள் இல்லை என்று கூறினோம். தமிழ் நாட்டில் இத்கைய நிலை இல்லை. இவன் போர் தொடுக்காமல் இருந்தபோதே இவனைச் சில அரசர்கள் இவனது நாட்டை அடையக் கருதிப் போர்தொடுத்தனர்.49 அவர்களை எதிர்த்துப் போரிட்டு நெடுஞ்சேரலாதன் அழித்தான்.50 இது தற்காப்புப்  thoturao
மார்ச் 16, 2015

2100 ஆண்டுகள் பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு.
2100 ஆண்டுகள்
பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு.


கோவை மாவட்டம் வெள்ளலூரில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று
ஆய்வு மையத்தை சேர்ந்த தூரன்சுவேலுச்சாமி, புலவர் கணேசன் ,
க.பொன்னுச்சாமி , செ.ரா.ரவிச்சந்திரன், சு.சதாசிவம் , ச.ரஞ்சித் மற்றும்
பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் நடத்திய மேற்ப்பரப்பு ஆய்வில் 2100
ஆண்டுகள் பழைமையான ரோமன் காசு ஒன்றும் , 1700ஆண்டுகள் பழைமையான ரோமன்
காசுகள்ஐந்தும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இதைப்பற்றி ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது,

கொங்கு நாடு மலைகளும், காடுகளும்நிறைந்த நாடு. பாலக்காட்டுக் கணவாய்
கொங்கு நாட்டு வரலாற்றை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியது.40கி.மீ
தொலைவு பரந்து கிடக்கும் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து பலபெரு வழிகள்
தமிழகத்தின் பிற பகுதிகளுக்குச் சென்றன. ஒரு பெருவழி மதுக்கரை,
வெள்ளலூர், சூலூர், காங்கேயம், கருவூர், குளித்தலை, உறையூர் வழியாகப்
பூம்புகாரைச்சென்றடைந்தது. இதற்க்கு இக்கால கல்வெட்டில் கொங்குப்பெருவழி
என்று பெயர். இந்தப்பெருவழிகள் சங்ககாலத் தொட்டு வழக்கத்திலிருந்தவைதான்
என்பதற்கு இப்பெரு வழிகளில் கிடைக்கும் ரோமானியக் காசுகளும், கைவினைப்
பொருட்களும் சான்று. வெள்ளலூரில் ரோமனியக்காசுகள் மட்டுமன்றிஅவர்கள்
விட்டுச்சென்ற அணிகலன்களும் கிடைத்துள்ளன.மேலைக் கடற்கரைப்
பட்டினங்களுக்கு வந்த யவன வணிகர்கள் பாலக்காட்டுக் கணவாய் வழியாகக்
கொங்கு நாட்டின் ஊடே பயணம் செய்து தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள
நகரங்களுக்குச் சென்றனர். யவனர் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்கள்
முழுவதும் விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக அகநானுற்றுப் பாடல் எண்
–149இல்

சேரலர் சுள்ளி-அம் பேரியாற்றுவெண் றுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்,
பொன்னொடுவந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு-எழ வளை-இ

என்னும் பாடலில், பேரியாறு சேர அரசருக்கு உரித்தானது என்றும் அவ்வழகிய
யாற்றினது வெண்ணிற நுரை சிதறுமாறு தொழில் மாட்சிமைப்பட்ட யவனர்கள் கொண்டு
வந்த நல்ல மரக்கலம் பொன்னைக்கொண்டுவந்து விலையாகக் கொடுத்துவிட்டு மிளகை
ஏற்றிச்செல்லும் இத்தகைய வளம் பொருந்திய முசிறிப் பட்டினத்தைப்பற்றிக்
கூறுகிறது.

முசிறி-அலெக்ஸாண்டிரியா வணிக ஒப்பந்தம்,
ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள
அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி பேரியாற்று முகத்துவாரத்தில்
அமைந்துள்ள சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகன்
ஒருவனுக்கும், எகிப்து நாட்டின் நைல் நதி ஆற்றின் முகத்துவாரத்தில்
அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா எனப்படும் ரோம நாட்டுத் துறைமுகத்தில்
வாழ்ந்த கிரேக்க வணிகன் ஒருவனுக்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டின்
இடைப்பகுதியில் (கி.பி.15௦0) ஏற்ப்படுதிக் கொள்ளப்பட்ட வணிகஒப்பந்தத்தை
விவரிக்கிறது. இச்சுவடி கிரேக்க மொழியில் இரண்டு ஆவணமாக இருபுறம்
\எழுதப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சார்ந்த வணிகன்
கையெழுத்திட்டுள்ளதால் அவ்வணிகன் கிரேக்க மொழியை அறிந்திருக்க வேண்டும்.
இதில் உள்ள முதல் ஆவணத்தின்படி கப்பலின் சொந்தக்காரர்
ஏற்றுமதிப்பொருட்கள்அலெக்ஸாண்டிரியாவை அடையும் வரை வணிகனின் முத்திரையைப்
பயன்படுத்திக்கொள்ளும் உரிமையைப் பெறுகிறார். இதில் உள்ள இரண்டாவது ஆவணம்
செங்கடலில் அமைந்துள்ள பெர்னிகே அல்லது மயோஸ் கார்மோஸ்(


MyosHarmos) என்ற
துறைமுகப்பகுதியில் ஏற்ப்படுதப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆவணம்
ஏற்றுமதிப்பொருட்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நைல் நதி
முகத்துவாரத்தில் அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா நகரை அடைவது வரை
ஏற்றுமதிப்பொருட்களுக்கு அளிக்கப்படவேண்டிய பாதுகாப்பு குறித்து
முன்பக்கத்திலும் அப்பொருட்களின் அளவு குறித்து பின்பக்கத்திலும்
எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு வாணிபத்திற்காக வணிகர்கள் பயன்படுத்திய
ரோமனியக்காசுகள்தான்இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ளன.
நமக்குக்கிடைத்துள்ள முதல் காசு  ரோமனியப்பேரரசர் லுசியல் கார்னிலியஸ்
சுல்லா கி.மு.82இல் வெளியிட்ட வெள்ளியாலான டேனாரியஸ் (காசு) ஆகும்.
இதில்ஒரு பக்கத்தில் செங்கதிர்க்கடவுளான ஜுபிடர்நான்கு புரவிகள் பூட்டிய
தேரில் பவனி வருகிறார். இன்னொரு பக்கத்தில் உள்ள அப்பலோ (கவிதைக்கும்
இசைக்கும் உரிய கடவுள்) கருங்காலி மரத்தாலான ஒரு மாலை அணிந்துள்ளார்.
அவர்கழுத்துக்குக் கீழ்வலுவான இடியுடன் கூடிய மின்னல் ஒளிர்கின்றது.
இது1:16௦கிராம்எடை கொண்டது.2௦ மி.மீ ஆரம் உடையது.

காசுகள்2,3,மற்றும் 4 சால்வசிரே பெலிக்கே குடியரசின் தியோடோசியஸ்,
தியோடோசியஸ்I, வேலண்ட்டினியன்II , ஆர்க்கேடியஸ் மற்றும் ஹானரோயஸ்’னால்
கி.பி.383முதல் கி.பி.408வரை பல காலகட்டங்களில் வெளியிடப்பட்ட
செப்புக்காசுகள் ஆகும். இதன் உள் பொதிந்த பொருள் குடியரசின் பாதுகாப்பு
என்பதாகும்.மறுபக்கம் உள்ள செய்தி வெற்றியை நோக்கி முன்னேறுதல்
என்பதாகும். இடது கையால் ஓர் அடிமையை இழுத்துச்செல்லுதலும், இடப்பக்கப்
பகுதியில் ஒரு சிலுவையும் இடம் பெற்றுள்ளது.

காசு 5 தியோடோசியஸ் IIவால் கி.பி.402முதல்450 வரையிலும் மார்சியன்னால்
கி.பி450 முதல் 457வரையிலும் வெளியிடப்பட்ட செம்புக்காசு ஆகும்.
இது1.௦2௦கிராம்எடை கொண்டது. இதுஒற்றைத் தலைப்பு எழுத்துடன் அரிமாவின்
பதுங்கிப்பாயும் நிலையில் உள்ளது. இதில் இரண்டும் – இரண்டுக்கும்
மேற்ப்பட்ட நேர்த்தியான அழகு வாய்ந்த எழுத்துக்கள் அச்சுக்கோர்த்தது போல
உள்ளே பொறிக்கப்பட்டுள்ளன. ரோமானியப்பேரரசுவெளியிட்ட இத்தகைய
ஒற்றைத்தலைப்புடன் கூடிய காசுகள் பேரரசின் முத்திரைசின்னங்களுடன்
பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி.6 ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும்
முதன்மையானதான இவ்வுருவே நீடித்தது. இவை கிழக்கத்திய நாணயச் சாலைகளில்
வார்க்கப்பட்டன.

காசு6 கானிஸ்ட்டன்டியஸ் IIவால் கி.பி324 முதல்கி.பி337 வரை வெளியிடப்பட்ட
செம்புக்காசு ஆகும். இது1. 41௦கிராம்எடை கொண்டது. மேலும் இவ்வகை காசுகள்
கானிஸ்ட்டன்ஸ் , கிரேட்டியன், தியோடோசியஸ்I , வாலண்ட்டினியன் I , II,
மற்றும் ஆர்க்கேடியஸ் ஆகியோரால் கி.பி378 முதல்383 வரையிலும்
வெளியிடப்பட்டன.

இதன் மூலம் தமிழகத்தின் மேற்க்குக்கடற்க்கரையில் இருந்து கிழக்குக்
கடற்க்கரை வரை பல நகரங்கள் வெளிநாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்ததை
அறிய முடிகிறது. மேலும் இத் தமிழ் வணிகர்கள் தமிழ் மொழியுடன் கிரேக்கம் ,
லத்தின் , ஹீப்ரு , அராமிக், சீனம், போன்ற பல மொழிகள் பயின்று வலம்
வந்ததை அறிய முடிகிறது. இவ்வாணிகம் மூலம் வெள்ளலூர் தலைமை சான்ற ஊரக
எழுச்சி பெற்று இருத்ததும் தெரிய வருகிறது என்றார்.

இதைப்பற்றி உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரும் , தமிழகத்
தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனருமான முனைவர்
ர.பூங்குன்றனாரிடம் கருத்துக் கேட்ட போது அவர் பாலக்காட்டுக் கணவாயின்
அருகிலிருக்கும் பலஊர்களில் வாழ்ந்த வீரர்களின் தலைவர்கள் வேளிராக
எழுச்சி பெற்றனர். அவர்கள் பல குடிகளை உள்ளடக்கிய அமைப்பிற்குத்
தலைவர்களாக விளங்கியவர்கள். கொங்கு நாட்டில் வாணிக வளம் பெற்ற நகரங்களில்
தங்கி ஆண்டனர். எனவே வெள்ளலூர்ரில் வேளிர் ஆட்சி செய்ததால் வேளிலூர்
(வேள்+இல்+ஊர்) என்று அழைக்கப்பட்டடுப் பின்னர் வெள்ளலூர் ஆனது.
வாணிகத்தில் மேற்கையும் – கிழக்கையும்  இணைத்த அலெக்ஸாண்டிரியாவை ஜூலியஸ்
சீசர் தம்ஆதிக்கத்தில் கொண்டு வந்த பின் கொங்கு நாட்டுப்பெருவழிகளில்
யவனர் பயணம் செய்தனர். இங்கு 15௦௦00 உரோமானியக் காசுகள் புதையல்களாகக்
கிடைத்துள்ளன. இவை ரோமானியர்கள் வேளிர்களுக்குத் திரையாக அல்லது
காணிக்கையாகக் கொடுத்தவை ஆகலாம். இப்போது கிடைத்துள்ள நாணயங்கள் ரோமானிய
வணிகர்கள் அன்றாடப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தியவை ஆகும். வெள்ளலூரில்
கிடைக்கும் தொல்பொருட்கள் அனைத்தும் அவ்வூர் யவன உலகத்துடன் கி.மு2
ஆம்நூற்றாண்டு முதல் கி.பி6 ஆம் நூற்றாண்டு வரை நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்தது என்பதை வலியுறுத்தும் என்றார்.


ஜனவரி 12, 2015

2,300 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கிய இரும்புத் தொழிற்சாலைகள்!

கோவை மாவட்டம் இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்களில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு சுடுமண் ஊதுகுழல்கள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்போதே அங்கு இரும்பு தொழிற்சாலைகள் இயங்கியது தெரியவந்ததுள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி அருகே இருக்கின்றன இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்கள். இங்கு வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது அங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பழமையான நெடுங்கல், இரும்பு உருக்க பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஊது குழல்கள், கொங்கு மண்ணுக்கே உரித்தான பல வண்ண வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், குறியீடுகள், சங்கு வளையல்கள், கல் மணிகள், மான் கொம்புகள், சில்லுகள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.

ஆய்வு மையத்தை சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி, வே.நாக
ராசு கணேசகுமார், ரவிச்சந்திரன், பொன்னுசாமி, சதாசிவம், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கண்ட ஆய்வை நடத்தினர். இதுகுறித்து ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன்தி இந்துவிடம் கூறியதாவது:

பண்டைய தமிழ் சமூகத்தில் இடையர் என்று அழைக்கப்பட்ட முல்லை நில மக்கள் மலைக்கும் வயலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் கால்நடைகளை மேய்த்தனர். அவர்கள் பொன்னைவிட தங்களது கால்நடைகளை உயர்வாக கருதியதாக பாணாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

அப்படியான கால்நடைகளை பிறர் கவர்ந்துச் செல்லும்போது அவர்கள் குழுப் போரில் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அப்படி இறந்துபோன வீரர்களுக்காக நெடுங்கற்கள் எழுப்பப்பட்டன. அப்படியான ஒரு நெடுங்கல்தான் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு அடி அகலமும், எட்டு அடி உயரமும் கொண்டுள்ளது. இப்போது இடையர்பாளையத்தில் இடையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிப்பது மேற்கண்ட ஆதாரங்களுக்கு வலு சேர்க்கிறது.

இடையர்பாளையத்துக்கு அருகிலுள்ளது பொன்னாக்கனி கிராமம். இங்கு இரும்பு கசடுகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு பெருங்கற்படை பண்பாட்டின் ஓர் அங்கமான கல் வட்டமும், கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலோக கண்டுபிடிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரும்பு. மனித குல நாகரிக வரலாற்றில் வேட்டை மற்றும் வேளாண்மையில் முக்கிய பங்கு வகித்தது இரும்பு.

பழந்தமிழர் இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு தயாரித்தனர் என்று குறுந்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இரும்பை உருக்காக மாற்ற 1,100 சென்டிகிரேட் வெப்பமும் எஃகாக மாற்ற 1,300 சென்டிகிரேட் வெப்பமும் தேவை. அந்த அளவுக்கு உலையில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய பழந்தமிழர்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊது குழல்கள் மூலம் காற்றை உலைக்குள் செலுத்தினர். அந்த ஊது குழல்கள், அதன் மூலம் செய்யப்பட்ட இரும்பு கசடுகளும்தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊது குழல்கள் 15 செ.மீட்டர் நீளமும் 6 செ.மீட்டர் விட்டமும் கொண்டவை. இவை சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, அந்த காலகட்டத்திலேயே இங்கு இரும்புத் தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது.

மேலும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஃபிளினி என்கிற வரலாற்று ஆய்வாளர் தனது ‘நேட்சுரல் ஹிஸ்டரி’ புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் சேர நாட்டிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்பிடுகிறார். மேலும், அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மன்னன் புருஷோத்தமன் கொங்கு பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட எஃகுவை கொடையாக கொடுத்தான் என்கிறது வரலாறு. எனவே, எஃகும், வார்ப்பு இரும்பு பொருட்களும் பழந்தமிழர் காலத்திலேயே இங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கு இப்போது கிடைத்துள்ள பொருட்கள் ஆதாரமாக அமைந்துள்ளன” என்றார்.

சங்ககாலச் சேரர் முத்திரை (இலச்சினை) கண்டுபிடிப்பு

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்


 சங்ககாலச் சேர மன்னர்களின் முத்திரை, பல அரியவகைக் குறியீடுகள், தறிக்கோல் ஒன்று, தாங்கிகள், இரண்டு மண்விளக்குகள், மூன்று பலகறைப் பாசிகள்(சோழிகள்), 3௦0 பல வண்ண மணிகள் எனப் பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

அமண என்று எழுதப்பட்டுள்ளது
இதைப்பற்றி ஆய்வு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் பொறியாளர் சு.இரவிக்குமார் மேலும் கூறியதாவது.

பதிற்றுப்பத்து, போற்றும் சங்ககாலச் சேர மன்னர்கள் வில்-அம்பு முத்திரையைத் தங்களது இலச்சினையாகப் பயன்படுத்தி உள்ள செய்தி அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, போன்ற சங்க இலக்கிய நூல்களில் விரவிக் கிடக்கின்றன. குறிப்பாக அகநானூற்றுப் பாடல் எண் : 127, 5 ஆம் அடி
வலம்படு முரசின் சேரல்ஆதன்
முந்நீர் ஒட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து

அகநானூற்றுப்பாடல் எண்396 – 17 ஆம் அடி
ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து

புறநானூற்றுப் பாடல் எண்39 – 15 ஆம் அடி
ஓங்கிய வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி

போன்ற பாடல்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.

மேலும் பதிற்றுப்பத்து சேரர்குல மரபை உறுதி செய்யும் வகையில் கரூர்க்கு அருகில் உள்ள புகளூர்த் தமிழ்ப் – பிராமி கல்வெட்டுகள் பதிற்றுப்பத்தின் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது ஆகியவற்றின் பாட்டுடைத் தலைவர்களான சேர மன்னர்கள் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. இங்கு 12 தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் உள்ளன.  அவை கோஅதன்செல்லிரும்பொறை (செல்வக்கடுங்கோவாழியாதன்) மகன் பெருங்கடுங்கோ (பெருஞ்சேரலிரும்பொறை) மகன் இளங்கடுங்கோ (இளஞ்சேரலிரும்பொறை) இளவரசனான போது தந்தை பெருங்கடுங்கோ யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்ற மூத்த சமணத் துறைவிக்கான உறைவிடம் ஏற்படுத்திக் கொடுத்ததைப் பற்றிக் கூறுகிறது.

இதே போல் சங்ககாலச் சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் பல கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் கிடைத்துள்ளன. உலக நாணவியல் அறிஞர்களுள் தலைசிறந்தவர்களுள் ஒருவரான தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் வெளியிட்டுள்ள சங்ககாலச் சேர மன்னர் நாணயங்கள் சதுர வடிவில் உள்ளன. நாணயத்தின் முன் பகுதியில் யானை முத்திரையும் பின் பகுதியில் வில் அம்பும் அதற்க்குக் கீழ் அங்குசமும் உள்ளது. பின் பகுதியில் உள்ள இவை ஒரு வட்டத்துல் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இங்கு நமக்குக் கிடைத்துள்ள முத்திரை சுடு மண்ணாலானது. சில்லுப்போல் தோற்றம் உடையது. 15 செ.மீ சுற்று அளவும் 5செ.மீ விட்டமும் கொண்டது. நாணயங்களில் உள்ளது போலவே வில் அம்பு மேல் பகுதியிலும் கீழ்ப் பகுதியில் அங்குசமும் உள்ளது. இவை மூன்றும் ஒரு வட்டத்துள் உள்ளன. எனவே இது சேர மன்னர் முத்திரை தான் என்பது உறுதியாகிறது. இவை கி.மு. 2 நூற்றாண்டை சேர்ந்தது ஆகும்.

இதைப் பற்றி உலகத் தொல்லியல் அறிஞர்களுள் தலைசிறந்தவர்களில் ஒருவரும் தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் துணை இயக்குனருமான முனைவர் ர.பூங்குன்றனாரிடம் காண்பித்துக் கருத்துக் கேட்டபொழுது அவர் இது சேர மன்னர் முத்திரைதான் என்றும் இது சேர மன்னர்களால் அப்பகுதியை நிர்வாகம் செய்த குறுநில மன்னர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ சேர மன்னர்களால் வழங்கப்பட்டு இருக்கும் என்றும் நாணயங்களில் உள்ளது போன்றே முத்திரை காணப்படுகிறது என்றும் மேலும் கீழ்ப் பகுதியில் உள்ள அங்குசம் யானையைக் குறிக்கும் என்றும் கூறினார்.

தாங்கிகள்
            இங்குப் பெருங்கற்கால நாகரிகத்தைச் சார்ந்த தாங்கிகள் 10க்கும் மேல் கிடைத்துள்ளன. இவை களிமண்ணால் செய்து சுடப்பட்டவை ஆகும். மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் இதைப் போலத் தாங்கிகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குக்கண்டெடுக்கப்பட்டுள்ள தாங்கிகள் அனைத்தும் சிவப்பு நிறங்களிலேயே காணப்படுகின்றன. இத்தாங்கியானது பானைகள் அல்லது பாத்திரங்கள் கீழே விழாமலும் அவை சாயாமல் இருக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும். மேலும் இங்கு ஆடை நெசவு செய்யும் போது நூலைச் சுற்றி வைப்பதற்க்குப் பயன்படும் தறிக்கோல் ஒன்று 6செ.மீ உயரத்தில் கிடைத்து உள்ளது. 30 அரியவகைக் கல் மணிகளும், தாயம் விளையாடுவதற்க்காகப் பயன்படும் பலகறைப் பாசி(சோழி) மூன்றும், ஒரு முகம் கொண்ட 5 செ.மீ விட்டமுள்ள இரண்டு மண் விளக்குகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகல்விளக்குகளைப் பயன்படுத்தல் இன்றளவும் தமிழ்நாட்டில் நிலவும் ஒரு பண்பாடு சார்ந்த நிகழ்வாகும்.

குறியீடுகள்:
               தமிழ்ப்பிராமி வரிவடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்க்கு வருவதற்கு முன்பாகவே குறியீடுகள் சமகால மக்களின் எண்ணம் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை வரிவடிவமே என இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிந்துவெளி எழுத்துக்களுக்கு அடுத்து இந்தியாவில் கிடப்பவை குறியீடுகள் ஆகும். இவை பரந்த அளவில் கிடைப்பதால் இக்குறியீடுகளின் மூலம் பண்பாட்டுப் பரவல் கூட நிகழ்ந்திருக்கலாம் என்பது எண்ணத்தக்கதாயுள்ளது.

இங்கு கிடைத்துள்ள குறியீடுகள் இலங்கை மற்றும் தமிழகத்தில் கரூர், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத்த குறியீடுகளுடன் ஒத்துக் காணப்படுகின்றன. மேலும் கொடுமணல் போல் இங்கும் தமிழ்ப்பிராமி எழுத்துக் கொண்ட பெயர்களும் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. எனவே சோமவாரப்பட்டியும் கொடுமணலும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. எனவே சங்ககாலத்தில் சோமவாரப்பட்டி சிறந்த நிலையில் இருந்திருக்க வேண்டும்.


டிசம்பர் 30, 2014

கரைப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவில்


>>>
>>> 1:1
>>>
>>> இடம் : உடுமலைபேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம், கரைப்பாடி
>>>
>>> அமணலிங்கேஸ்வரர் கோயில் தென்புற அதிட்டானம்
>>>
>>> காலம் : வீரபாண்டியன் ஆட்சியாண்டு 4, (கி.பி 1269)
>>>
>>> செய்தி : திருத்தாந் தோன்றி ஈஸ்வரமுடையார் கோயில் திருப்பள்ளியறை
>>>
>>> நாச்சியார்க்கு விசையநான வீர நாராயணன் பூஜை பொருட்கள்
>>>
>>> கொடுப்பத்தற்காக   காவடிக்கா நாட்டில் கரைபாடியில் உள்ள
>>>
>>> தொண்டைமானிடம் பணம் தானமாக கொடுத்த செய்தியை
>>>
>>> தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்திஸ்ரீநன்மங்களஞ் சிறக்க கோவிராசகேசரி பற்மநரான திரிபுவனச்
>>>
>>> 2 டியில் ஆளுடையார் திருத்தாந் தோன்றி ஈஸ்வரமுடையார் கோயில் …
>>>
>>> 3 ருக்கும் பவழ வெள்ளாழரில் காவன பாவையான தொண்டைமான்
>>>
>>> 4 நாச்சியார் திருப்பள்ளியறை நாச்சியார்க்கு திருவாட்டிப் பூரத் திரு
>>>
>>> 5 அரிசியும் கறி அமுதும் உப்பும் மிளகும் கறியமுது இருபத்தஞ்ச
>>>
>>> 6 விளக்குத் திருநோன்புக்கு முன்பு இடும் விளக்கு நீக்க ஒன்.........
>>>
>>> 7 கும் நாச்சியார்…..த்திருநொன்பும் சந்திராதித்தவரை
>>>
>>> சக்கரவத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா
>>>
>>> நின்ற திருநல்லியாண்டு 4 வது காவடிக்கா நாட்டுக் கரைபா
>>>
>>> காணியுடைய பிராமணரியில் விசையநான வீர நாராயணச் சற்வமாழனி
>>>
>>> (புளி)யநென் காவடிக்கா நாட்டில் கரைபாடியில் இ
>>>
>>> ………..அச்சுமுடை(யு)ம் …. வாங்கிக் கொண்டேன் …சில
>>>
>>> கொண்டச்சுக்கு அச்சு சந்தியாதீப விளக்கு இரண்டு விளக்குச்
>>>
>>> செலுத்துவேநாகவும்
>>>
>>> நோன்பு ஆட்டை வட்டம்….க்கு மிடத்து கொன்டி அழிவுக்கு
>>>
>>> பகையெக …………. கழக்குறுணி பயறும் திருவமுதுக்குப்பரை
>>>
>>> ...................... நெய்யமுதும் திருக்கை விளக்கு திருமேற்பூச்சு …டக்க
>>>
>>> …..ற்று இருபதும் வெற்றிலை அமுது இரு …
>>>
>>> பொமுது அஞ்சு பந்த விளக்கு இடுவேநாகவும்…………
>>>
>>> செலுத்தகடவெநாகவும் இச்சந்தியா தீப விளக்
>>>
>>> இக்கோயில்………………… வாணியாவனொருவன் செலுத்துவாநாகக்
>>>
>>> கல்வெட்டிக்குடுத்தென் இக்காணி…யுடையார் பன்மாஹேஸ்…..
>>>
>>> 1:2
>>>
>>> இடம் : துண்டுக் கல்வெட்டு
>>>
>>> காலம் : இராசராசன்  ஆட்சியாண்டு 3, (கி.பி 988)
>>>
>>> செய்தி : காவாடிக்கா நாட்டில் கரைபாடியில் உள்ள ஆளுடையர்க்கு
>>>
>>> நெய்யமுது, கறியமுது, உப்பமுது, மிளகமுது மற்றும் நெல்
>>>
>>> தானமாக கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1. ஸ்வஸ்தி ஸ்ரீ இராச ராச தேவர்க்கு யாண்டு முன்…
>>>
>>> 2. …காணியுடைய (சி)வப்பிராமணந்  திருச்சிற்றம்…
>>>
>>> 3. …க்கல் பழஞ்சாலாகை அச்சொன்றுங் கொண்டுச்…
>>>
>>> 4. …(கா)வாடிக்கா நாட்டில் கரைபாடியில் ஆளுடையார் திரு …
>>>
>>> 5. …ந்தடத்தில் தேவரைக்கும்பிட்டு இத்தேவற்க்கு அமுது…
>>>
>>> 6. …சுக்குடுத்த நிமந்தமாவது நல்லூற்கானாட்டில் செம் …
>>>
>>> 7. …பதினாழியும் நெய்யமுது கறியமுது உப்பமுது மிளகமு(து)…
>>>
>>> 8. …ஆட்டை வட்ட நாற்பத்தைங் கலநெல்  .…
>>>
>>> 9. ...பாற்படுத்துக்குடுக்க இரண்டாவதி நெதிர்கார முதல் நம் ஓலை…
>>>
>>> 1:3
>>>
>>> இடம் : துண்டுக் கல்வெட்டு
>>>
>>> காலம் : அதிராசராஜன்
>>>
>>> செய்தி : திருத்தாந் தோன்றிசுவரமுடையார் கோயிலுக்கு தானமாக
>>>
>>> கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1. திருத்தாந் தோன்றிசுவரமுடையார் கோயில்…
>>>
>>> 2. …ச்சியில் கணக்க வெள்ளாளன் (பாவைக்) …
>>>
>>> 3. …(சந்தி) ராதித்தவரை செலுத்துவேநாக கல்வெட்டிக்குடுத்தே..
>>>
>>> 4. …(த)வ கநம்களுக்கும் நாம் அபிசேகம் பண்ணி நாட்டிலே நா..
>>>
>>> 5. …கேட்டு நமக்கு நன்றாக நித்தனானாழிய்க்கு அமுது செய்தமு …
>>>
>>> 6. …அளக்கக்கடவ கடமை நெல்லிலே நாம் விட்ட நாநாழி யாகக்..…
>>>
>>> 7. …நெல்லி நாழியாக நாளொந்றுக்கு நெல் குறுணினானாழியாக …
>>>
>>> 8. …த்துத்தானம் பண்ணினொம் கோ அதிராசராஜனான ஸ்ரீபாத…
>>>
>>> 9. … ம் பியந் உத்தரமந்திரி எழுத்து பந்ம ரக்க்ஷை ஸ்ரீ பன்மாஹேஸ்வர...
>>>
>>> 1:4
>>>
>>> இடம் : துண்டுக் கல்வெட்டு
>>>
>>> செய்தி : தானம் கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1. சிவப்பிரமணந் பட்டன்…குபேறனா…..பட்டந்
>>>
>>> 2. … யிலுக்கிவ நிட்ட சங்கு பெநி செகண்டியுட்பட...
>>>
>>> 3. …வற்கு யாண்டு 22 வது கரைப்பாடியில்…
>>>
>>> 4. …த தெண்ணாயிரச் சக்கரவர்த்தியும் வீரகேரளபட…
>>>
>>> 5. …இரண்டும் இக்கோயில் (இ)டடுங்கோ குச்சி புக்குவ…
>>>
>>> கோவிலின் 1:5
>>>
>>> இடம் : கோயில் தென்புற அதிட்டானம்
>>>
>>> காலம் : கோப்பரகெசரி பன்மரான திரிபுவனச் சக்கரவத்தி
>>>
>>> செய்தி : தானம் கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்திஸ்ரீ  கோப்பரகெசரி பன்மரான திரிபுவனச்
>>>
>>> சக்கரவத்தி………………ல் பத்தாவது காவடிக்காநாட்டில் கரைப்பாடி…
>>>
>>> 2 யில் ஊராற் மலை மண்டலத்தில் வெள்ளப்ப நாய…………….. திகைப்படிவு
>>>
>>> சக ஒன்றும் ஆக அச்சு இரண்டும் கரை
>>>
>>> 3 ப்பாடியில் ஆவுடையார் திருத்தாந்தோன்றி சிரமு………………
>>>
>>> க்குடுத்தொம் சந்திராதித்தவ
>>>
>>> 4 ரை செல்வதாகக் கல்வெட்டிகுடுத்தொம் இதுப் பந்…
>>>
>>> 1:6
>>>
>>> இடம் : கோயில் வடக்குபுற குமுதம்
>>>
>>> காலம் : திரிபுவனச் சக்கரவத்தி கோனெரின்மை (கொண்டான்)
>>>
>>> செய்தி : நெய்யமுது கறியமுது உப்பமுது மிளகமுது தயிரமுது தானம்
>>>
>>> செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்தி கோனெரின்…….கோவில் காலும்
>>>
>>> 2 …இத்தெவர்க்கு அமுது படிக்கு …
>>>
>>> 3 … விட்ட வரை ----------------------------ன்று
>>>
>>> 4 ……………………………டாக நாளொன்ருக்கு நெல் பதினாழியும் நெய்
>>>
>>> 5 யமுது கறியமுது உப்பமுது மிளகமுது தயிரமுது…………….க்கு நெல்
>>>
>>> கெட்டி………………தன்மன்தாவது நல்லுர்க்கா நாட்டில் செம…….
>>>
>>> குறுணி நாநாழியும் நான்மூன்று……
>>>
>>> 6 …த்தாண்டு முதல் ஆட்டை வட்டம் நாற்பத்தொன் கலககப்…..
>>>
>>> 7 கண்டு நிமித்தம் நள்பாற்படுத்துக் குடுத்த இரண்டாவது… செட்டி
>>>
>>> 8 வை பன்மாரக்ஷை.
>>>
>>> உத்திராமந்திரி எழுத்து..
>>>
>>> 1.7
>>>
>>> இடம் : கோயில் வடக்குபுற அதிட்டானம்
>>>
>>> காலம் : வீரராசெந்திரன் ஆட்சியாண்டு 16, கி.பி 1222
>>>
>>> செய்தி : மலைமண்டலத்து வெள்ளப்ப நாட்டிலுள்ள மணக்கடவைச் சேர்ந்த ஊரார்
>>>
>>> கரைப்பாடியில் உள்ள ஆவுடையார் திருத்தான்தொந்றி ஈஸ்வரமுடையார்க்கு
>>>
>>> ஆண்டு தோரும்  அச்சு ஒன்றும், கார்த்திகை தீப்பிடி அச்சு ஒன்றும் தானம்
>>>
>>> கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.
>>>
>>> 1 ஸ்வஸ்த்தி ஸ்ரீ வீரராசெந்திர தேவர்க்கு யாண்டு 16 வது காவடிக்கா
>>>
>>> நாட்டில் கரைப்பாடியூராற்க்கு மலைமண்டலத்து….
>>>
>>> 2 வெள்ளப்ப நாட்டில் மணக்கடவில் ஊரோம் நாங்கள் இறுத்து ……. அச்சு
>>>
>>> ஒன்றும் கார்த்திகை (தீ)ப்பிடி அச்சு ஒன்றும்
>>>
>>> 3 ஆக அச்சு இரண்டும் கரைப்பாடியில் ஆவுடையார் திருத்தான்தொந்றி
>>>
>>> ஈசரமுடையாற்க்கு ஆண்டு வரை தோரும்  இறுத்து வ
>>>
>>> 4 ருவொர்மாகக் கல்வெட்டிக் குடுத்தொம் இது சந்திராதித்தவரை
>>>
>>> செல்வதாகவும் இப்படிக்கு இது பன்மாயேன்
>>>
>>> 5 இலக்கு ரக்க்ஷை.
>>>
>>> 1.:8
>>>
>>> இடம் : கோயில் வடக்குபுற குமுதம்
>>>
>>> காலம் : கோனெரிண்மை கொண்டான்
>>>
>>> 1 ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச்சக்கரவத்திகள் கோனெரிண்மை
>>>
>>> கொண்டான்…
>>>
>>> ளுக்கும் நம்மோலை குடுத்ததாவது தங்களுரில் ஆவுடையார் திருத்தா….
>>>
>>> 1:9
>>>
>>> இடம் : கோயில் மேற்குப்புற அதிட்டானம்
>>>
>>> காலம் : விக்கரம சிங்கதேவன் (கி.பி 1623-1673)
>>>
>>> செய்தி : கொயிலுக்கு நிலதானம் கொடுத்து எல்லைகலாக சேரனைமேன்
>>>
>>> கொண்ட சோழவதி, குலசேகரவதி, வீர கேரள ஆறு மற்றும் சோழ மண்ணறை
>>>
>>> சேரனைமேன் கொண்ட சோழவதி பற்றி குறிப்பிடுகின்றன
>>>
>>> 1 ……………………. விண்ணப்பஞ் செய்து திருமுடைபாதம்
>>>
>>> திரிபுவனசக்கரவத்தி கோநெரிமெ கொண்டான் விக்கரம சிங்கதேவன்
>>>
>>> குனியம்புத்தூர்க் கண்ணுடை
>>>
>>> 2 அரைமன்றாட்டலும் ஒரு மா முக்காணி அரைக்காணியும் நமக்கு நன்றாக
>>>
>>> நிற்றம் நானாழி அரிசி அமுது செல்கிற நிமண்ணறை அடைவு அரமாயி
>>>
>>> யங்காமந்னறை சேரனைமேன்
>>>
>>> 3 கொண்ட சோழவதிக்கு வடக்கும் குலசேகரவதிக்குக் கிழக்கும்
>>>
>>> இரண்டாங்கண்ணாற்றுக்கு முதற்சதிரத்தில் தலைமடை வட்ட செய்யில்
>>>
>>> அரைமாவும் அதயி சோழ மண்ணறை சேரனைமே
>>>
>>> 4 ன் கொண்ட சோழவதிக்குத் தெற்கும் வீர கேரள ஆத்துக்கு மேற்கும்
>>>
>>> முதற்கண்ணாற்றில் இராண்டாங்கண்ணாற்றில் மாகாணி முந்திரிகையும்
>>>
>>> வதிக்குக் கிழக்கும் இவ்வதிக்குத் தெற்கும் இரண்டாங்
>>>
>>> 5 கண்ணாறில் நிலம் முதற்சத்திரத்தில் காணி முந்திரிகையும் வதிக்கு கிழக்கும்
>>>
>>> வதிக்கு வடக்கும் முதற்கண்ணாரை நில மூன்றஞ்சதிரத்தில் நிலம் காணி
>>>
>>> அரைக்காணி முந்திரிகைக் கீழரையும் முத்ற்கண்ணாற்
>>>
>>> 6 றில் இரண்டா(ஞ்)சதிரத்தில் அரைக்காணியும்…
>>>
>>> --
>>> --
>>> "ஜனவரி 04, 2014

தமிழகத்தின் அரிய ஓவியங்கள்


நம் நாட்டை கொள்ளை அடித்த வெள்ளையர்கள் (கொள்ளையர்கள்) நம்நாட்டின் இயற்கை அழகையும் அரண்மனைகள் மற்றும் கோட்டைகள், கோயில்கள், அற்புத ஓவியங்களாக ஆக்கி அதிக விலைக்கு விற்றுள்ளனர். அவர்கள் வியபார நோக்கோடு வரைந்தாலும் நமக்கு நம் நாட்டின் அரிய ஓவியங்களும் அழிந்து போன  கோட்டைகளும் இன்று காண கிடைக்கின்றன. அவைகளில் மதுரைக் திருமலைநாயக்கர் மஹால், முற்றிலும் அழிந்து போன திப்புவின் லால் மஹால், மதுரைக் கிழக்கு மாசி வீதி, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சை பெரிய கோயில் மற்றும் இந்தியக் காட்சிகளை ஒவியங்களாய்த் திட்டி பதிப்போவியங்களாய் மாற்றி எராளமான பணத்துக்கு விற்றும் ஓவியப் பதிப்புகளைக் கொண்ட உயர்ந்த புத்தங்களைப் பதிப்பித்து விற்றும் பெருஞ்செல்வர்களாயினர் 1770-க்குப் பிறகு பிரிட்டிஷார் இந்தியாவில் காலுன்றத் தொடங்கிய தருணம் கிழக்கிந்தியக் கம்பெனி மூலமாக பிரிட்டிஷ் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் இங்கு பதிவியிலமர்ந்து பதவிக்கேற்றபடி சொகுசு மிக்க வசதியான பங்களாக்களில் வசிக்கலானார்கள் இந்த சொகுசான வீடுகளில் வசதிமிக்க வாழ்க்கைக்கு இந்தியாவை காட்டும்படியான இந்திய ஓவியங்கள் வேண்டப்பட்டன இத்தேவை ஒரு முகமாய் அதிகரிக்கவும் தொழில் ரீதியான பிரிட்டிஷ் ஓவியர்களோடு அமெச்சூர் கலைஞர்களும் இந்தியாவிற்க்கு இறக்குமதியனார்கள்.. பிரிட்டனிலிருந்த இயற்கைக் காட்சிகளைத் தீட்டும் ஓவியர்களின் பொருளாதார நிலை பின் தங்கிப் போனது வருவாய்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்தன.  இந்துயாவில் மிக எளிதக பணம் பண்ணக்ககூடிய அதிஷ்டக் கூறுகளைக் கொண்ட கதைகள் பிரிட்டனிலிருந்த இந்தியாவுக்குப் வந்து போன ஓவியக் கலைஞர்களால் பரவின. கீழை நாட்டுக் கட்டிடங்கள் கோயில்கள் மாளிகைகள் கோட்டைகள்   இயற்கைக்காட்சிகள் ஜரோப்பியக் கலை ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாயிருந்தவை அவை அதுவரை யராலும் திண்டப்படாதிருந்தே வந்தவை அந்த புதிய காட்சி ருப விஷயங்கள் ஓவித்துக்கும் தொழில் ரதியான  ஓவியர்களுக்கும் மிகவும் தேவையாகின மற்றொரு மிக முக்கிய வரலாற்று நிகழ்வு பிரிட்டிஷாருக்கும் ஒரளவுக்கு பிரெஞ்சுக்காரர் களுக்கும் இந்தியாவைப் பற்றிய குறிப்பாக தென்னிந்தியாவைப் பற்றிய பல்வேறு சிந்தனைக்கு யோசனைக்கு உணர்வுக்கு காரணமாகிப் போனது அவைதான் நான்கு மைசுர் யுத்தங்களும் ஹைதர் அலி திப்பு சுல்தான் என்ற இரு பெயர்களும் எனவே தென்னிந்தியாவைப் பற்றிய விரிவான குறிப்புகளும் விவரைணைகளும் ஓவியசித்தரிப்புகளும்(ஏனெனில் புகைப்டக் கருவி அன்று இல்லை ) வேண்டப்பட்டன   பிரிட்டனிலிருந்து இந்தியாவிக்கு வந்து பலகாலம் பல்வேறு திசைகளிலும் சுற்றித் திரிந்து வரைந்துகொண்டு தாய்நாடு திரும்பியதும் தாங்கள் அள்ளி வந்த இந்தியக் காட்சிகளை ஓவியங்களாய்த் தீட்டி பதிப்போவியங்களாய் (ETCHINGFS AND GRAPHICS)மாற்றி ஏராளமான  பணத்துக்கு விற்றும் ஓவியப்  பதிப்புகளைக்கொண்ட உயர்ந்த  புத்தகங்களைப் பதிப்பித்து விற்றும் பெருஞ்செல்வர்களாயினர் இந்தியாவிக்கு பயணம் செய்ய எவ்வித வாய்ப்புமற்ற ஆங்கிலேயர்கள, இந்தியாவைப் பற்றி அதன் கோட்டைகள், மாளிகைகள் , கோயில்களைப் பற்றி பயணக் குறிப்புகள், நூல்கள் வாயிலாகப் படித்தறிந்து பெற்ற ஆர்வத்தாலும்      இந்திய ஓவியக் காட்சிகளின் பதிப்புகளைப் பெரிதும் விரும்பி விலைக்கு வாங்கினர்இந்த வழியாக இந்தியாவக்கு வந்த முதல் ஓவியர் வில்லியம் ஹாட்ஜஸ்(WILLIAM HODGES), இவர் சென்னையில் --1780வந்திறங்கினாலும்தென்னிந்தியாவில் அதிகம் எதையும் வரையவில்லை.உடல் அசௌகரியம் ஒரு புறமிருக்க, இவர் தென்னிந்தியாவை அதிகம் சுற்றி பார்க்காத்தற்கு முக்கிய காரணம் பிரிட்ஷாருக்கும் ஹைதர் திப்புக்கும் இடையே இருந்த பகைமையும் யுத்தங்களும் ஒரு வருடகாலம் மதராஸ் செயின் ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளிவராமல் முடங்கி கிடந்த ஹாட்ஜஸ் 1781 ல் கல்கத்தாவுக்கு புறப்பட்டு போய்விட இந்தியக் காட்சிகளை வரைந்தார். இவை லண்டனில்  ஆக்வாடிண்ட் எனும் முறையில் வண்ணப் பதிப்போவியங்களாய் aAமாற்றம் பெற்று 48 பதிப்பு ஓவியங்களை கொண்ட ஓவிய நூலாக இந்தியாவின் தேர்ந்தெடுத்த காட்சிகள் “select view of India” எனும் பெயரில் 1785 88 களில் வெளிவந்தது. ஆக்வாடிண்ட் என்றால் கிட்டத்தட்ட நீர் வண்ணம் என்ற பொருள் தருவதோடு இவ்வைகை ஓவிய பிரதிகளைப் பார்க்கையிலும் ஒருவித நீர்வண்ண ஒவியத்தைப் பார்க்கும் அழகியல் அனுபவத்தையே பெறுகிறோம். இந்த வகை பதிப்போவிய வேலைப்பாடும் ETCHING  எனும் முறையின் ஒரு வடிவமே ஆகும் ஒருவித அதி நுண்துளைகளாலான பரப்பைக்கொண்ட பிரத்தியேக செப்புத்தகடுகள் ஆக்வாடிண்ட்  பதிப்போவிய வேலைக்காக அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்டன அதன் மீது மெழுகைப் பரவவிட்டு மிக நுண்ணிய நுனியைக் கொண்ட ஊசியினால்  எற்கெனவே தாம் வரைந்து வைத்திருக்கும் ஓவியக் காட்சியை மெழுகு பூசின பரப்பின் மேல் கீறிக்கீறி வடிவமைத்து பின் செப்புத் தகட்டை நைட்ரிக் அமிலத்தால் முக்கியெடுப்பார்கள், கிறப்பட்ட கோடுகள் அமிலத்தில் அரிக்கப்பட்டிருக்க, மெழுகுப்பூச்சில் மறைந்த பகுதிகள் அப்படியே இருக்கும், உருளையைக்கொண்டு காகித்த்தின் மேல் வைக்கப்பட்ட தகட்டின் மேல் அழுந்த உருட்ட, வண்ண மை பூசின. தகட்டின் கீறிய் வடிவங்கள் பதிவா.கும். பல்வேறு வண்ண மைகளைக் கொண்டு காகிதங்கள் மேல் செப்புத் தகட்டை உருளையால் அழுத்தி எவ்வளவு பிரதிகள் வேண்டுமானால் எடுக்ககும்  முறை ஆக்வாடிண்ட்.அகும்

  அடுத்து லண்டனில் வெளியானது, “மைசூர் யுத்த பூமியைச் சுற்றியுள்ள இடங்களும் மலைக்கோட்டைகளும்  என்ற ஓவியப் பதிப்பு நூல். இந்நூலிலுள்ள ஓவியங்களை வரைந்தவர்கள் மைசூர் போர்க் களங்களில் ஈடுபட்ட வெள்ளைக்கார ராணுவ அதிகாரிகள். மற்றொரு ஓவியர் அன்றைக்குப் பரவலாக அறியப்பட்டிருந்த ஓவியர்  ராபர்ட் ஹோம் (ROBERT HOME) என்பவரால் வரையப்பட்டது. இவர், திப்பு சுல்தானுக்கு எதிராக ஜெனரல் காரன்வாலிஸ் மேற்கொண்ட போரில் 1791 – ல் ராணுவத்தில் உடன் சென்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசாங்க ஓவியர். கம்பெனி ராணுவத்துக்கும் திப்புவின் மைசூர் படைகளுக்குமான யுத்த முஸ்தீபின்போது இவர் வரைந்த ஓவியங்கள் 1794 – ல் “SELECT VIEWS OF MYSORE“ என்ற பதிப்போவிய நூலாகவும், மற்ற இரு ராணுவ அதிகாரிகளான லெஃப்டினண்ட் கோல் புரூக் (CAPTAIN A.ALLAN) என்பவர்களின் ஓவியங்கள் முறையே, “ மைசூர் அரசின் கீழுள்ள இடங்களின் பன்னிரெண்டு காட்சிகள்“, “ மைசூர் தேசத்துக் காட்சிகள்என்ற பெயரில் இரு நூல்களாய் 1793 – 94 இல் வெளியி்ப்பட்டன. இந்த ஓவியப் பதிப்புகள் எண்ணிக்கையில் குறைவாயிருப்பினும் உண்மையில் இவையே தென்னிந்தியாவின் சில பகுதிகளின் காட்சிகளை அன்றைக்கிருந்த நிலையில் பிரிட்டிஷ் ஓவியர்கள் பதிவு செய்து வைத்தவை. அது மட்டுமல்ல, தென்னிந்திய முக்கிய போர் அரங்கு (மைசூர் யுத்தங்கள் ) ஒன்றின் முதன்முதல் ஓவியச் சித்தரிப்பும் இதுவேயாகும். மற்றொரு ராணுவ அதிகாரியான லெஃப்டினணட் ஜேம்ஸ் ஹண்டது ()LT.JAMES HUNTER) ஜெனரல் காரன்வாலிஸின் தலைமையிலான படைப்பில் மூன்றாவது மைசூர் யுத்தத்தில் பணியாற்றியவர். இவர் திறமையானதொரு அமெச்சூர் ஓவியர்,1792-ல் இறந்துபோன ஹண்டர், திப்பு சுல்தானோடான போர்க் காட்சிகளைச் சித்தரிக்கும் பல நீர் வண்ண ஓவியங்களைத் தீட்டியவர். இவர் அவரது மறைவுக்குப் பின்மைசூர் தேசத்தின் கண்கவர் இயற்கைக் காட்சிகள்“ (PICTURESQUE SCNERY IN THE KINGDOM OF MYSORE) என்ற பெயரில் 1804 நூல் வடிவில் –1805 வாக்கில் லண்டனில் வெளியானது.
   சார்லஸ் கோல்டு (CHARLES GOLD) என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் ராயல் ஆர்டில்லரி படைப்பிரிவில் காப்டனாகப் பணிபுரிந்த சிறந்த அமெச்சூர் ஓவியர். இவர் 1791   காலக்கட்டத்தில் சென்னைப் பகுதியில் ஓவியங்கள் வரைந்து, அவை “ORIENTAL DRAWINGS: SKETCHS BETWEEN 1791-1798“ என்ற தலைப்பில் நூலாக 1806இல் வெளியானது. ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்த திப்புசுல்தானின், “லால் மகால்எனும் அழகிய அரண்மனையை அதன் முன்னால் குதிரை யானைகளோடு இதர பரிவாரங்கள் சூழ, திப்பு திவான் பூர்ணய்யாவுடன் நின்றிருப்பது போன்ற அற்புத வண்ண ஓவியம் ஒன்றை சார்லஸ் கோல்டு தீட்டியிருக்கிறார். இது இன்றைக்கு மிக அரிதான ஓவியம் என்பதோடு அதிமுக்கியமானதுமாகும். ஏனெனில் ஸ்ரீ ரங்கப்பட்டண கோட்டை வளாகத்தில் திப்புவின் லால் மகால் இன்று இல்லை. 1799 – ஸ்ரீரங்கப்பட்டண வீழ்ச்சிக்குப் பின் அவ்வரண்மனை பீரங்கிகளால் தகர்க்கப்பட்டுவிட்டது.

 மற்ற பதினெட்டம் நூற்றாண்டு கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து பிரிட்டிஷ் ஓவியர்களிலிருந்து வித்தியாசமானவர்கள் தாமஸ் டானியல் (THOMAS DANIELL), வில்லயம் டானியல் (WILLIAM DANIELL) என்பவர்கள், தாமஸ் டானியலின் மருமான்தான் வில்லியம் டாதனியல். மற்ற ஓவியர்களைப் போல் அல்லாது டானியல்கள் பயணம் செய்து ஏராளமான ஆக்வாடிண்ட் பதிப்போவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், தைல வண்ண ஓவியங்களைச் செய்திருப்பதோடு பயண அனுபவங்களையும் அற்புதமான தினசரி குறிப்பேடுகளாய் எழுதிச் சென்றிருக்கிறார்கள். எனது பயணங்கள் சார்ந்த இந்நூலை எழுதுவதற்கான முக்கிய வழிகாட்டல்களில், உந்து சக்தியாய் டானியல்களின் ஆக்வாடிண்ட் படங்களே முக்கியமாய் இருந்திருக்கின்றன. அவர்களின் காலடிச் சுவட்டைப் பின்பற்றியே பெரும்பாலும் நான் என் பயணங்களை மேற்கொண்டவன்.

  1749 – ல் பிறந்த தாமஸ் டானியல் மாக்ஸ்வெல் எனும் கோச்சு வண்டித் தயாரிப்பாளரிடம் ஏழு வருடங்கள் பயிற்சியாளனாக இருந்து வண்ணங்களையும், பல்வேறு வார்நிஷ்களையும் கற்றறிந்தவர். மூன்றாம் ஸார்ஸிடம் கோச்சு வண்டிப் பராமரிப்பாளராயிருந்த சார்லஸ் காட்டன் என்பவரிடம் வேலை செய்த உறவால், தாமஸின் சிறிய மலர் ஓவியமொன்று 1772 இல் ராயல் அகாதெமியின் கண்காட்சியில் இடம்பெற்றது. தாமஸ் டானியல் ஆக்வாடிண்ட் பதிப்போவிள முறையின் முக்கிய முன்னோடிக் கலைஞர்களில் ஒருவர். டானியல்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது தாமஸ் டானியல்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது தாமஸ் டானியலுக்கு முப்பத்தாறு வயதும் வில்லிளம் டானியலுக்கு பதினாறு வயதும் நிரம்பியிருந்தது.
  கிழக்கிற்திய கம்பெனியின் அனுமதி பெற்று சீனாவின் காண்டன் நகர் வழியாக அவர்கள் 1786 – ல் கல்கத்தாவில் வந்திறங்கினார்கள். இந்தியாவை பல்வேறு திசைகளிலும் சுற்றிப் பார்த்து ஓவியம் வரையும் செலவுக்கான பணத்தை டானியல்கள், ஜமீன்தார்களை, பிரபுகளை, பணக்காரர்களை அமரச் செய்து உருவப்படங்களைத் தீட்டியும், அங்கங்கே இயற்கைக் காட்சிகளைத் தீட்டியும் பழைய ஒவியங்களை சுத்தப்படுத்தி பழுதுபார்த்துக் கொடுத்தும் சம்பாதித்தனர். இதன் எல்லா விவரங்களையும், தினசரி நிகழ்ச்சிகளையும் தம் பயணக் குறிப்பேடுகளில் சித்தரித்துள்ளனர். டானியல்களின் நாட்குறிப்பிலிருந்து அவர்கள்,“ காமிரா ஆப்ஸ்க்யூரா“ (CAMEA OBSCURA) எனும், காட்சிகளை நோக்கி காகிதப் பதிவு செய்யும் கருவியை உபயோகித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. காமிரா ஆப்ஸ்க்யூரா என்பது தத்ரூபமான யதார்த்த வகை ஓவியச் சித்தரிப்புக்கும், உலகின் முதல் காமிரா கண்டுபிடிப்புக்கும் இடைப்பட்ட இயந்திரக் கருவி. அபரும்பாலும் செல்வ வசதி மிக்க பிரபலமான கலைஙர்களே இயற்கைக்   காட்சிகள், மாளிகைகள், கோட்டைகள் ஆகியவற்றைப் பார்்து, அவற்றைப் பல்வேறு கோணங்களில் நுட்பம் பிசகாமல் வரைந்து ஓவியந்தீட்ட இக்கருவியை வைத்திருந்தனர் என்பதும், இந்திய ஓவியர்களால் இது உபயோகிக்கப்படவில்லை என்பதும் தெரிய வருகிறது.
  காமிரா ஆப்ஸ்க்யூரா 16 – ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கருவி. ஒளிபுகாத மரப்பெட்டிக்குள் லென்சுகளும் உருவத்தைப் பிரதிபலிக்கும் ஆடிகளும் பொருத்தப்பட்டிருக்கும். லென்சுகளால் பார்க்கப்படும் காட்சி ஆடிகளின் வழியாகப் பிரதிபலிக்கப்பட்டு ஒரு காகிதப் பரப்பின் மீது விழுகிறது. ஓவியன், காகிதப்பரப்பில் விழுந்த காட்சி உருவின் ஓரங்களையும் இதர பகுதிகளையும் டிரேஸ் செய்துகொண்டால் போதும். இதைவிடத் தெளிவாக ஒளி ஊடுருவிச் செல்லும் வகையில் லென்சுகளும் பிரதிபலிப்பாடிகளும் பொருத்தப்பட்டகாமிரா லூஸிடா “ (CAMERA LUCIDA ) எனும் கருவியை சில ஓவியர்கள் உபயோகித்தனர். தென்னிந்திப் பயணத்தின்போது ஏராளமான மலைக்கோட்டைகளையும் அரண்மனைகளையும் கோயில்களையும் ஓவியமாக்கிய தாமஸ்வில்லியம் டானியல்கள் காமிரா ஆப்ஸ்க்யூராவின் உதவியுடன் பெரும்பகுதி படங்களை வரைந்ததாக அவர்களின் குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறோம்.

     தங்களைக் கவர்ந்த ஆலமரங்களை பல காட்சிகளாக்கிய டானியல்கள், சிலசமயம் ஆலமரத்துக்கும் அரசமரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் ஆலமரத்தைச் சுற்றியே மேடை கட்டி சிறு கோயில்களையும் கல் நாகர் உருவங்களையும் காட்டி ஜனங்கள் வணங்குவதுபோல ஓவியமாக்கியிருக்கிறார். பல சமயம் காமிரா ஆப்ஸ்க்யூராவைக் கொண்டு காட்சிகளை டிரேசிங் செய்யும் வேலையை வில்லியமும், பிறகு அந்த டிரேஸ் செய்த படத்தில் மற்ற காட்சி விவரங்களைத் தாமஸ் சேர்ந்த விவரமும் டயரியில் எழுதப்பட்டிருக்கிறது.
    கல்கத்தா, டெல்லி, ஆக்ரா பகுதிகளுக்குச் சென்று விட்டு மீண்டும் கல்கத்தா திரும்பிய டானியல்கள், தம் தென்னிந்தியப் பயணத்துக்கான பணத்தைத் திரட்டும் முகமாக 1792 – ல் வடஇந்திய ஓவியங்களைக் கொண்டு கல்கத்தாவில் ஒரு லாட்டரிப் பரிசுக் குலுக்கலை ஏற்பாடு செய்தனர். இந்த லாட்டரியில் கிடைத்த பெருந்தொகை, இவர்களின் தென்னிந்தியப் பயணத்துக்கான செலவைப் போதுமான அளவுக்கு சரிகட்டும்படியாயிருந்து.  
-தென்னிந்திய மலைக்கோட்டைகளுக்கான பயணம் கல்கத்தாவிலிருந்து 1792, மார்ச் பத்தாந்தேதி துவங்க, டானியல்கள் ஏறிய கப்பல் மதறாஸ் பட்டணக் கடற்கரையை அடைந்தது.

  இரண்டு இலேசான டிராயிங்  மேஜைகள், தூரத்தைக் கணக்கிட பெரிய சக்கரம் பொருத்தப்பட்ட கோல் ஒன்றும் அவர்களின் மலைக்கோட்டைப் பயணங்களில் இடம்பெற்றிருக்கிறது. இவ்விரு ஓவியர்கள் தம்மோடு நாற்பத்தேழு பேர் கொண்ட குழுவை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். டானியல்கள் தனித்தனியாக இரு பல்லக்கில் விட்டு விட்டு ஆள் மாற்றி ஆளாக, தோள் மாற்றி தோளாக பதினோறு இந்திய பல்லக்குத் தூக்கிகளால் மலைக்கோட்டைப் பயணங்களின்போது வுமந்ர் தூக்கிச் செல்லப்பட்டனர். ஆளுக்கொன்றாக அமர்த்திக்கொண்ட இரண்டு குதிரைகளையும் கவனித்துக்கொள்ள பயற்சி பெற்ற முஸ்லீம் குதிரைக்காலர் ஒருவர், கூடாரங்களையும் உணவுப் பண்மங்களையும் இதர சாமான்களையும் எடுத்துச் செல்ல பொதி சுமக்கும் மூன்று காளை மாடுகளும், ஒரு மாட்டு வண்டியும், நான்கு வண்டியோட்டிகளும் அந்தப் பணயக்குழுவில் அமர்த்தப்பட்டிருந்தனர். பாத்திர பண்டங்கள், உணவுப் பண்டங்கள், கோழிகள், வாத்துகளை எடுத்துச் செல்ல சுமைசுமக்கும் கூலிகள் ஏழுபேர், டிராயிங் மேஜைகளையும் ஓவியர்களின் கட்டிலையும் எடுத்துச் செல்ல நான்கு பேர். டானியல்களின் உதவியாட்களில் வரவு செலவு கணக்கு வழக்கைக் கவனித்துக்கொள்ளவும், சுதேசிகளோடு பேசவும் கூடிடய துபாஷ் ஒருவரும் சமையற்காரர் ஒருவரும், இரண்டு பியூன்களும், ஆயுதம் தரித்த மெய்க்காப்பாளர் ஒருவரும், அமர்த்தப்பட்டதாக டானியல்களின் அரிதான டைரி விவாரிக்கிறது. அன்றைக்கு லண்டனில் பத்திரிக்கைச் செய்தியாக பிரிட்டிஷாருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையேயான யுத்தச் செய்திகளும் அவை இடம் பெற்ற பல்வேறு மலைக்கோட்டைகளின் தகவல்களும், அவ்வப்போது வெளிவந்த வண்ணமிருந்தன. இதை பார்த்த டானியல் அந்நத மலைக்கோட்டைகளை பல்வேறு கோணங்களில் வரைந்து கொண்டனர். டானியல்களின் வட இந்திய தென்னிந்திய பயணம் நிறைவடைய ஏழு ஆண்டுகள் ஆனது. இந்த நீண்ட கால பயணத்தில் இந்தியாவின் நானகு திசைகளிலும் அலைந்து திரிந்து இவ்விரு ஓவியர்களும் செய்திருக்கும் பணியைப் போல எந்த வெளிநாட்டவரும், ஏன் வேறு இந்தியக் கலைஞனும் கூட செய்ததில்லை. இவர்களின் ஓவியங்கள் மூலமாக காட்சிரூபமான இந்தியாவை அதன் வடக்குதெற்காக, கிழக்குமேற்காக ஐரோப்பாவும், உலகின் பிற நாடுகளும் தெரிந்துகொள்ள முடிந்தது.
   தர்மபுரி, சேலம், ஹொசூர், கிருஷ்ணகிரி பகுதி மலைக்கோட்டைகளின் தூரக்காட்சிகளும், சமவெளித் தோற்றங்களும் இவ்வோவியர்களைப் பரவசத்திலாழ்த்தின. வில்லியம் டானியல் தம் நாட்குறிப்பில் அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்:-

   குறிப்பாக சூரிய உதயத்தின்போது, தொலைவில் தெரியும் மலைகளின் காட்சி மனதை மிகவும் ஈர்த்து பரவசமடையச் செய்கிறது. அவற்றின் அகன்று உயர்ந்த மேற்பரப்பும் அதில் எழும்பிய கோட்டைகளும் சூரிய கிரணங்களை வாங்கிப் படித்து சுற்றுப் புறத்திலுள்ள சமவெளிகள் மீதும் படச்செய்து பார்வைக்கு இதமான அழகுக் காட்சியாகத் தோன்றச் செய்கின்றன.“

  பிறகு அவர்கள், திருச்சி மலைக்கோட்டையை அடைந்து நிறைய கோணங்களில்  வரைந்துகொண்டனர். நான்கு முக்கிய கோணங்களில் அமைந்த திருச்சி மலைக்கோட்டைக் காட்சிகளை நான்கு வித ஆக்வாடிண்ட் பதிப்போவியங்களாய் செய்துகொண்டனர். 1792 – மார்ச் மாத இறுதியில் மதுரையை அடைந்தனர். திருமலைநாயக்கர் மகாலை மூன்று பதிப்போவியங்களுக்காகப் படம் வரைந்துகொண்டனர். மகால் வளாகத்தில், மகாலுக்கு நேரெதிரே இருந்த மதுரைக் கோட்டையின் ஒரு முக்கிய அழகிய கட்டிடம் இப்போது இல்லை. நிறைய படிக்கட்டுகளைக் கொண்ட மண்டபம் போன்ற இக்கட்டிடம் கோட்டையின் ஒரு முக்கிய பகுதி. இதை மிக அழகுற வரைந்து ஆக்வாடிண்ட் படமாக்கியிருக்கிறார்கள் டானியல்கள். பிறகு, குற்றலாம், கன்னியாகுமரி, ராமேசுவரம், தஞ்சாவூர் வரை பயணம் செய்து ஏராளமான ஓவியங்களை வரைந்து கொண்டு மதறாசுக்குக் கடல் வழியே வருயைில் மகாபலிபுரத்திலிறங்கி அங்குள்ள சிற்பங்களையும் குடைவரைக் கோயில்களையும் வரைந்துகொண்டு மதறாஸ் திரும்பினர். 1792, நவம்பர் மாதம் மதறாஸ் வந்து சேர்ந்த டானியல்கள், பட்டணக் காட்சிகளை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை, அதன் உள் வளாகத்துப் பகுதிகளை, அர்மேனியன் பாலம் ஆகியவற்றை ஆக்வாடிண்ட் பதிப்புக்கான படங்களாய் வரைந்துகொண்டு பம்பாய் சென்று இங்கிலாந்துக்குக் கப்பல் ஏறினர். தாங்கள் வரைந்த படங்களைச் செப்புத் தகடுகளுக்கு மாற்றி ஆக்வாடிண்ட் பதிப்புகளாய் 1795 – ல் செய்து நூல் வடிவில் கொண்டுவந்தனர். மொத்தம் 144 ஆக்வாடிண்ட்களை ஆறு பகுதிகளாய் கொண்டகீழை நாட்டு இயற்கை காட்சிகள்” (THE ORIENTAL SCENERY)  எனும் தலைப்பில் 1795 – 1808 வாக்கில் அவை நூலாக வெளியிடப்பட்டபோது அது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டானியல்களின் ஆக்வாடிண்ட் பதிப்போவிய பிரதிகள் கல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியலில் இருக்கின்றன. சென்னையில் கோட்டை அரும்பொருட்காட்சியில் கொஞ்சம் இருக்கின்றன.
·  மோற்கோள் 
·  நூல்
·  தமிழகக் கோட்டைகள் விட்டல்ராவ்