கோட்டமங்கலம் பெருங்கற்காலச் சின்னங்கள்

இவ்வூர் உடுமலை திருப்பூர் சாலையில் உள்ளது. இங்குள்ள கருவன்ராயன் கோயிலுக்கு பின்புறம் விஜயகுமார் அவர்களின் தோட்டத்தில் இரண்டு பெருங்கற்காலச் சின்னங்களான கற்பதுக்கைகள் உள்ளது.  இதன் உள்பகுதியில் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு பூச்சும் உள்ளது. தெற்கு பகுதியில் இடுதுளையும், மேல்புறத்திலும்(Cap Stone) இடுதுளையும் உள்ளது. மற்றொன்றில் வடபுறத்திலும் மேற்கு பகுதியிலும் இடுதுளை உள்ளது. இதுவரை கிடைத்த கல்பதுக்கைகளில் ஒரு இடுதுளை  இருக்கும். ஆனால் இங்குஉள்ள கல்பதுக்கையில் இரண்டு பக்கங்களும் இடுதுளைகள் உள்ளது. பிற்காலத்தில் இதை யாரவது மாற்றி அமைத்து இருக்கலாம். இங்குள்ள கற்பதுக்கையில் குறிபிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களின் முன்னோர்கள் என்றும் வழிபாடு நடந்தது என்றும் தற்போது யாரும் வழிபடவில்லை என்றும் இவ்வூரில் வசிக்கும் முதியவர் கூறினார். இவ்வூரின் தென்புறத்தில் சாம்பல் மேடு ஒன்றும் உள்ளது. ஆனால் தற்பொழுது அந்த சாம்பல்மேட்டில் குளம் வெட்டிவிட்டார்கள். குளத்துக்கருகே நெடுநிலை நடுகல் இருந்ததாகவும் அது ஐந்து துண்டாக உடைந்து விட்டதால் அதை இவ்வூர் மக்கள் துணி துவைப்பதற்க்கு பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வூர் வடக்கே கல்லாங்காடு என்னுமிடத்தில் நூற்றுக்கான கல் பதுக்கைகள் அழிந்துவிட்டன. இங்குள்ள தென்னை மரங்களும் ஒவ்வொன்றும் கல்பதுக்கைகள். இங்கு வெற்றித் திருநகர் காலத்தை சேர்ந்த  பெருமாள் கோயிலும் ,இக்கோயிலுக்கு அருகில் இருக்கும் கருட கம்பத்தில் உள்ள கல்வெட்டில் இக்கோவில் ராஜப்ப பெருமாள் என்று உள்ளது நாயக்கர் மன்னர்களின் குலதெய்வமான வல்லகுண்டம்மன் கோயிலும் 3 அடுக்குநிலை நடுகற்களும் உள்ளது.
கற்பதுக்கையின் முன்பக்கம்

மேற்பகுதியில் இடுதுளை

கற்பதுக்கையின் பின்புறபகுதி

மேற்பகுதி

தெற்கு பகுதியில் இடுதுளை

இரண்டாவது கற்பதுக்கை



வடக்குபுற இடுதுளை

மேற்குபுற இடுதுளை

உள்பகுதியில் சுண்ணாம்பு பூச்சு


பழமையான கிணறு

கருட கம்பம்

கருட கம்பத்தில் உள்ள கல்வெட்டு



கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்