தளி பாளையகாரர் எத்தலப்பன்






தமிழகத்தில், உடுமலை அருகே திருமூர்த்திமலை அருவிக்கு செல்லும் வழியில் உள்ளது தளி பேரூராட்சி. இந்தப் பகுதியை "பாளையக்காரர்கள்" செல்வ செழிப்புடன் ஆட்சி செய்துள்ளனர். இதற்கு ஆதாரமாக இன்றும் பல்வேறு சிலைகளும், பழங்கால பொருட்களும் உள்ளன.



உடுமலை அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள கிராமங்கள் மற்றும் மலைப்பகுதியை தளி பாளையகாரர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். விஜயநகர பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாளையம் எத்தலப்பன் வம்சாவளியினரால் ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.



ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில், கட்டபொம்மன் உட்பட பாளையக்காரர்களுடன் இணைந்து தளி பாளையக்காரர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர்.



தளி பாளையம் மீது போர் தொடுக்க ஆங்கிலேயர் சார்பில் அனுப்பப்பட்ட தூதுவனை தளி பாளையகாரர்கள் தூக்கிலிட்டனர்.




1801
ம் ஆண்டு இறுதியில், ஆங்கிலேயர்கள் தளி பாளையக்காரர்கள் மீது போர் தொடுத்து, அங்கிருந்த கோட்டையை அழித்து ஆட்சியாளர்களை கொன்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது. 



தளி பாளையகாரர்களின் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் திருமூர்த்தி அணை கட்டுமான பணிகளின் போது கோணகரடு பகுதியில் அவரது முன்னோர் சிலைகள் கண்டறியப்பட்டன. அவை தற்போது காண்டூர் கால்வாய் பகுதியிலுள்ள ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளது.



தூது வந்த ஆங்கிலேயனை தூக்கிலிட்ட மரம் ஜல்லிபட்டி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோப்பில் உள்ளது. தூக்கிலிட்ட மரம் பட்டுபோய்விட்ட நிலையில். தூக்கிலிடப்பட்ட ஆங்கிலேயனின் சமாதி அவன் தூக்கிலிடப்பட செய்தியை வெளி உலகுக்கு தெரிவிற்கும் கல்வெட்டை சுமந்தபடி கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.







கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. துாது வந்த ஆங்கிலேயனை துாக்கிலிட்டு கொன்றதாக உள்ள செய்திக்கு கல்வெ்ட்டு ஆதாரம் உள்ளதா ? எங்கு உள்ளது அவரது கல்லறையில் அவ்வாறு எதுவும் எழுதப்படவில்லையே. எனக்கு விளக்கம் தேவை 7402106813 தென்றல் சேகர் உடுமலை

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்