சிஞ்சுவாடி




பொள்ளாச்சி உடுமலை நெடுஞ்சாலையில் கெடிமேடு என்னும் ஊரிலிருந்து 6கிமீ தொலைவில் உள்ளது. இங்கு பூண்டியம்மன் என்னும் பழமையான கோவில் உள்ளது. இக்கோயிலை இடித்துவிட்டு மக்கள் புதிதாக கட்டிவிட்டார்கள். பழைய கோவிலின் இடிபாடுகள் இங்குள்ள குளத்துக்கருகில் உள்ளது. கோவில் தூண்களிலும், ஜெகதியிலும் கல்வெட்டுகள் உள்ளது. இவ்வூருக்கு தெற்கே நாடுகாண் மேடு என்னுமிடத்தில் பாறையில் கல்வெட்டு இருந்ததாகவும்  இப்போது முற்றிலும் அழித்துவிட்டதாகவும் இங்கிருந்த கோயில் பூசாரி கூறினார். இவ்வூர்க்கு அருகிலுள்ள தேவநல்லூர் என்னும் ஊரில் புலிக்குத்தி நடுகல் மற்றும் பெருங்கற்காலச் சின்னங்களான கல்வட்டங்களும் சாம்பல் மேடு என்னும் பகுதியில் கருப்பு சிவப்பு நிற மட்பாண்டங்களும், கொங்கு நாட்டுக்கே உரிய அலைபோன்ற வண்ணப்பூச்சுகளுன் கூடிய ஓடுகளும் உள்ளது. அருகில் உள்ள ஊர்களில்
தேவனூர்புதூர் நரிக்குத்தி நடுகல்லும், நரி சிற்பம் உள்ளது.
பூவளப்பருத்தி புலிக்குத்தி நடுகல்.
 திப்பம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில் நாயக்கர் காலத்து நடுகல் உள்ளது
கூளநாயக்கன்பட்டி – புலிக்குத்தி நடுகல்லும் மற்றும் நடுகற்களும் உள்ளது.
இவ்வூரில் ஆண் தீ பாய்நத கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்