மருதூர் கல்வெட்டு


                                              மருதூர்  கல்வெட்டு

இருப்பிடம் - பூளவாடியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூரிலிருந்து வடக்கே குண்டடம் செல்லும் சாலையில் உப்பாற்றங்கரையில் உள்ளது.  கல்வெட்டு. இக்கல்வெட்டுப்போல் இன்னொன்றும் இருந்ததாக அவ்வூரில் மாடு மேய்க்குமு் ஒருவர்  ஆற்றின் நடுவே இருந்ததாகவும் ஆற்றின் வெள்ள பெருக்கில் அடித்து செல்லப்ட்டதாகவும் கூறினார். நானும் (சதாசிவம்), மற்றும் நண்பர்(பொன்னுச்சாமி)  ஆற்றில் சில இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்க வில்லை. அருகில் சுப்பையா கவுண்டர் தோட்டத்தில் இதே போன்று கல்வெட்டு திரிசூலம் பொறித்த கல்வெட்டு ஒன்று முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வூரில் சாம்பல் மேடு என்னும் பகுதியில் பெருங்கற்காலச் சின்னங்களான மட்பாண்டங்கள் மேற்பரப்பாய்விலே அதிகளவில் தென்படுகிறது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் சாம்பல் மேடு உள்ளது. இவ்வூர் மக்கள் இந்த பகுதியை கூத்தனூர் எ ன்று கூறிகிறார்கள். இவ்வூரில் பழைமையான கண்டியம்மன் கோயில் ஒன்று உள்ளது. உப்பாற்றங்கரையில் வடப்பகுதியில் கல்வட்டங்களும் உள்ளது.











கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்