கொங்கு நாடு





     சேர,சோழ, பாண்டிய மன்னர்கள், தொண்றுதொட்டு ஆண்டு வந்தமையால் பழந்தமிழகம் சேர நாடு, சோழநாடு, பாண்டியநாடு என மூன்று பெரும் பிரிவுகளாக இருந்து வந்த்து. இவற்றுடன் கொங்க நாட்டுப் பகுதிகளும் இருந்தன. ஆனால் இவை சங்க காலத்தின் இறி பகுதியிலேயே சிறப்புறத் தொடங்கின. இவற்றுள் கொங்கு நாடு 24 நாடுகள் உள்ளடக்கியதாகவும் வடக்கே தலைமலை, தெற்கே வைகாவூர் (பழனி), மேற்கே வெள்ளியங்கிரி மலை, கிழக்கு குளிதலை ஆகிய பகுதிகளை எல்லைகளைப் பற்றி கொங்கு மண்டல சதகமும், தனிப்பாடல் ஒன்றும் வரையறுத்துக் கூறுகின்றன.
     “வடக்கு தலைமலையாம் வைகாவூர் தெற்கு                                            குடக்கு வெள்ளிப்பொற்பு – கிழக்கு                      களித்தண்டலைமேவும் காவிரி சூழ்நாடு                                            குளிதணைடலையளவும் கொங்கு
கொங்கு புறம்பெற்ற கொற்றளை வேந்தே” (புறம் -373) என்றும்,      ஒளிறுவாய் கொங்கர்” (குறுந்தொகை – 383) என்றும், “ஆகெழு கொங்கர் நாடு” (பதிற்றுப்பத்து – 22) என்றும், “வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி” (அகநானூறு – 253) என்றும், “கொங்கர் மணியறை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழிவு” (அகநானூறு – 368) என்றும், கொங்கு பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றது. பிற்காலத்தில் நிர்வாக வசதிக்காக 24 சிறிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டன.
கொங்கு 24 நாடுகள்

1.பூந்துறைநாட்டு ஊர்கள்
பூந்தறை
சாளமங்கலம்
அறச்சலூர்
பேரேடு
வெள்ளோடை
சூழாநிலை
விளக்கேத்தி
சித்தோடு
நசியனூர்
கிழாம்பாடி
ஈஞ்சம்பள்ளி
திண்டல்புதூர்
எழுமாத்தூர்
முடக்குறிச்சி
சத்திமங்கலம்
இலவமலை
பிடாரியூர்
அநுமன்பள்ளி
சேமூர்
திருவாச்சி
பெருந்துறை
குளவிளக்கு
வீரகநல்லூர்
ஓடாநிலை
சாத்தம்பூர்
காகம்
ஈரோடு
முருங்கைத்தொழு

2.தென்கரைநாட்டு ஊர்ப்பெயர்கள்
கொற்றனூர்
வீராச்சிமங்கலம்
நீலம்பூர்
மூலனூர்
தூரம்பாடி
ஊதியூர்
குறிச்சி
எதிரனூர்
கொழுமண்குழி
இளம்பிள்ளை
மாம்பாடி
கிழான்குண்டல்
முளையான் பூண்டி
பிரமியம்


இந்த ஊர்கள் சூழ்ந்துள்ள தாராபுரம் நிலக் கோட்டையுள்ள கடிஜ்தலம். ஒரு அரசப்பிரநிதி இருந்து அதிகாரஞ் செலுத்துவது. இக்கூற்றத்தைச் சார்ந்த நாடுகள் 24 ஆதலின் கிராமத்தில் தாராபுரஞ் சேர்த்து எண்ணப்படவில்லை.
     தாராபுரம் பழனி முதலிய சில ஊர்கள் சேர்த்து நறையூர் நாடு என்று வழங்கினதும் உண்டு.
3.காங்கேய நாடு ஊர்ப்பெயர்கள்
காங்கேயம்
பார்ப்பதி
முத்தூர்
வல்லியிறைச்சல்
பரஞசேர்வளி
கன்னபுரம்
காடையூர்
காரையூர்
வெள்ளைகோவில்
பட்டாலி
திருபுவனமா
தேவிபுரும்
ஆறுதொழு
கீரனூர்
மருதுறை
ஆலாம்பாடி

     சிவமலை இந்நாட்டின் பொதுத்தலமென கொண்டு கிராம ஊர்த்தொகையிற் சேர்க்கவில்லை.
4.பொன்காலூர் நாடு
பொன்கலூர்
இச்சிக்காணி
தென்னமங்கலம்
கொடுவாயி
அலகுமலை
தென்பள்ளி
செம்புத்தொழு சொக்கம்பாளையம்
தளிகை அவிநாசிபாளையம்
இலக்கம்பாடி
குன்றிடம்
நிறையூர்
நமனாரி
புற்றிரைச்சல்
அங்கித்தொழு
மண்ணறை
உகாயனூர்
அரவண நல்லூர்
பெற்றம்பள்ளி
பெருந்தொழு
பல்லாக்கோயில் பொட்டிக்கம்பாளையம்
நல்லூர்
திருப்பூர்
கற்றாங்காணி
அமுக்கயம்
பெரும்பிள்ளையூர்
குடிமங்கலம்
ஊற்றுக்குழி


கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்