தமிழ் நூலகம்

தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் 

01.
நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் எனத் தமிழில் வெளிவந்த அனைத்தையும் அப்படியே பாதுகாக்கிற உயரிய முறையின் வழி - படவடிவக் கோப்புகளாக்கிப் பாதுகாக்கிறது. இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைச் செய்துள்ளது. நூலகத்தில் உள்ள அயலக மின்னூல்கள் என்ற தொடுப்பானது உலகம் முழுவதும் நூல்களைப் பாதுகாக்கிற இணைய தளங்கள் பற்றிய செய்தியைச் சொல்லுகிறது. நூலகத்தில் உள்ள இதழ்களையும் நூல்களையும் யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் வைத்திருப்பது வணங்குதற்குரிய செயல். ஈழமண்ணிலிருந்து வெளிவந்த அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் இந்த இணையதளம் வாழ்த்துதற்குரியதே.

02.
"மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" என்பது உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும், தமிழார்வலர்களும் பெற வசதிசெய்யும் திட்டம். 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் 400 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களைத் தட்டச்சு செய்து படிவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்துள்ளது. சங்க நூல்களில் பல இந்த வகையில் மின்நூல்களாக்கப் பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது வணங்குதற்குரிய செயல்.

03.
இந்திய மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தொகுத்துள்ள அரிய முயற்சி இது. தமிழில் வெளிவந்த 1617 வகையான நூல்களை (4,11,723 பக்கங்களை) இந்த இணையத்தில் இணைத்துள்ளது. நூல்களை இலவசமாக இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும். வலை இறக்க முடியாது. இணையத்தில் நுழைந்து, நூல்களைக் காணுவதற்குரிய செயலிலை வலையிறக்கி நமது கணினியில் பதிவு செய்து கொண்டு, மொழிப் பட்டியலில் தமிழைத் தேர்வு செய்து சொடுக்கினால், புத்தகத்தின் பட்டியல் தோன்றும். பட்டியலில் விரும்புவதைத் தேர்வு செய்து உள்நுழைந்தால் புத்தகத்தைக் காணலாம். வைத்திய ரத்தினச் சுருக்கம் போன்ற அரிய நூல்களும் உள்ளன.

04.
வைணவ இலக்கியத்தின் நூல்கள் படவடிவக் கோப்புகளாகவும், பாடல்களாகவும், படக்காட்சித் தொகுப்பு களாகவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிடைத்தற்கரிய 300 க்கு மேற்பட்ட நூல்கள் இதில் உள்ளன. வைணவ சந்தியா வந்தனம், லோகாச்சாரியார் புத்தகங்கள், வைணவ சம்பிரதாய வியாக்கியானம், 4000 திவ்யப்பிரபந்தம், வேதாந்த தேசிகர் பிரபந்தம், பாகவதம், வைணவ இதழ்கள் (ராமானுஜம், அமிர்தலகரி, வைணவம், அரிசமய திவாகரம்) என ஏராளமான புத்தகங்கள் இந்த வலையில் இலவசமாக இறக்கும் வகையில் உள்ளன. அனைத்து வகையான புதிய பதிவுகளும் தொடர்ந்து செய்யப் படுகின்றன. இந்த வலையின் முயற்சி வியப்பூட்டுகிறது. வாழ்த்துகிறோம்.

06.
தமிழ் மரபு அறக்கட்டளை. தமிழ் மொழியின் நுட்பத்தைப் பாதுகாக்கும் நோக்கொடு இயங்கிவரும் அமைப்பு. 2001 டிசம்பரில் கொங்கன் படை என்ற நூலை மின்பதிவு செய்து இதன் பயணம் தொடங்கியது. இதுவரை அபிதான கோசம், கண்ணுக்குள் வெளி, எக்காளக் கண்ணி, கோதை நாச்சியார் தாலாட்டு என 90 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை, மின்நூல்கள் ஆக்கி வலையேற்றியுள்ளது. இந்த மின்நூல்களை இலவசமாக வலையிறக்கலாம். நண்பர்களை இணைத்து இயங்கிட முன்னெடுத்துள்ள இவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.

07.
காந்தளகம். தமிழ் நூல்களின் வெளியீட்டிற்கான தரமான பதிப்பகமாக விளங்கும் இது தமிழ் நூல் என்கிற இணையதளம் வழி, இலவசமாக வலையிறக்கிட, மின் நூல்களையும் வைத்துள்ளது. தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள், பொங்கு தமிழ், தமிழர் கால்வாய், பறவைகள் எனத் தொடரும் இவைகள் 15 க்கும் மேற்பட்டதாக உள்ளன. இந்த மின்நூல்களை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்கலாம், அச்சிடலாம், இணைய இணைப்பில் மட்டுமே பார்க்க இயலும். புதிய நூல்களை மின்நூலாக்கி வைத்துள்ளது வணங்குதற்குரிய செயலே. வணங்கி வாழ்த்துவோம்.

08.
வள்ளலார் நூல்கள் - அருட்பெருஞ்சோதி அகவல் முன்னுரை, அகவல் உரை, பாரதியாரும் வள்ளலாரும், புத்தரும் வள்ளலாரும், சின்மய தீபிகை என 30 வகையான நூல்களை மின் நூல்களாக்கப்பட்டு இந்தத் தளத்தில் உள்ளன. பார்வையாளர்கள் பெயரைப் பதிவு செய்து உறுப்பினர் ஆகி உள்நுழைந்தால் இலவசமாக வலையிறக்கலாம். உறுப்பினர் கட்டணம் இல்லை. நூல்கள் தட்டச்சு செய்யப்பட்டு படவடிவக் கோப்புகளாக மாற்றப் பட்டுள்ளன. சில நூல்கள் சரியான எழுத்துருக்களை இணைக்காததால் ஒழுங்காக வருவது இல்லை.

09.
தமிழக அரசின் பாடத்திட்ட நூல்கள் - படவடிவக் கோப்புகள் பகுதி பகுதியாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தில் 70 க்கும் மேற்பட்டவை மின் நூல்களாக்கப்பட்டு இலவசமாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் படவடிவக் கோப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர் பயிற்சிக்கான பாடப்புத்தகங்களும் உள்ளன. தற்பொழுது அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை கற்பித்தல் அட்டைகளின் வழியாகத் தானே கற்றல் முறையில் நடைபெறுகிறது.

10.

நூல்களை ஒருங்குறியில்
இணையத்தில் மட்டுமே
படிக்க முடியும்.
150 க்கும் மேற்பட்ட
நூல்கள் உள்ளன.


11
திரு ராமகலை அவர்களின் முயற்சியால் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் 275 க்கும் மேற்பட்டவை மின் நூல்களாக்கப்பட்டு இலவசமாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. பகவத்கீதை, இராமாயணம், சிறுகதை, நகைச்சுவைத் துணுக்குகள் என தமி்ழில் வெளிவந்த நூல்களை, குறிப்புகளைப் படவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்துள்ளது வாழ்த்துதற்குரியதே. உள்ளே நுழைய உங்கள் மின் அஞ்சலை குறிப்பிட்டுப் பதிவு செய்து கொண்டால் போதும். கட்டணம் ஏதும் இல்லை.



12

சமணம் தொடர்புடைய தமிழ் நூல்கள் இந்தத் தளத்தில் உள்ளன. இதில் 18 க்கும் மேற்பட்ட நூல்கள், தட்டச்சு செய்து, மின் நூல்களாக்கி, இலவசமாக வலையிறக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. நாலடியார், நீலகேசி, திருநூற்றந்தாதி, அறனெறிச்சாரம், மேருமந்தர புராணம், திருவெம்பாவை, சமண துதிப்பாடல்கள், சமணம் அறிமுகம் என்பவை இத் தளத்தில் உள்ள நூல்களாகும்.
13
செந்தமிழ்.ஆர்க்



கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. மிக மிக அருமையான பயனுள்ள இணைய தளம் வாழ்த்துக்கள் தென்கொங்கு சதாசிவம்

    பதிலளிநீக்கு
  2. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் சேவை செய்யும் தளம் ... உங்கள் பனி இனி வருங்காலங்களிலும் சிறக்கட்டும் !!!!

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்