காசிலிங்கபாளையம் பெருங்கற்காலசின்னங்கள்



உடுமலை பல்லடம் சாலையில் ஜல்லிபட்டியிருந்து கிழக்கே 8 கீலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூரில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு முதுமக்கள் தாழிகள் உள்ளது. இவ்வூரிலிருந்து கிழக்கே புதுஅய்யப்பன் நாயக்கன் பாளையத்தில் ஏழு ஏக்கர் பரப்பளவில் கல் வட்டங்கள் இருந்துள்ளது. தற்போது ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்குள்ள கல்வட்டங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளது. இதன் குறுக்விட்டம் ஆறு மீட்டர் உள்ளது. இங்குள்ள கல்வட்டங்கள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்கின்றது.உள்ளூர் வாசிகளால் மற்ற இடங்களில் கூறும் அதே கதையை இவர்களும் கூறுகிறார்கள். விவசாய பணிக்காக இவைகளை அழிக்கும் பொது சிவப்பு கலர் பாசிகளும் கை வளையல்களும் கிடைத்துள்ளது. அருகிலிருக்கும் ஊர்களில் நந்தவனபாளையம், நாவிதன்புதூர் , வெரும்வேடபட்டி ஆகிய இடங்களில் பெருங்கற்கால சின்ன்ங்கள் உள்ளது.
சு.சதாசிவம் .𑀘𑀢𑀸𑀘𑀺𑀯𑀫𑁆






கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்