ஐவர்மலை




        
                 (அயிரைமலை)
ஐவர்மலை உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள இரண்டு மலைகளில் பெரியதாக உள்ள மலை பெரிய ஐவர்மலை என்றும் அளவில் சிறியதாக உள்ள மலை சிறிய ஐவர்மலை என்றும் பொது மக்களால் அழைக்கப் பெறுகிறது சிறிய ஐவர்மலையில்தான் சிறப்புப்பெற்ற இரண்டாம்  வரகுணனின் வட்டெழுத்துக் கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டை சோர்ந்த சமணச் சிற்பங்கள் எழில் வாய்ந்த இயற்கைச் சுனைகள் உள்ளன. ஐவர்மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1400 அடி உயரத்தில் வடக்கு தெற்காகஅமைந்துள்ளது. தெற்குப் பக்க உச்சியில் பிள்ளையார் கோயிலும் வடக்குத் திசையில் இராமானுஐர் மடமும் தண்டபாணி கோயிலும் தெற்குத் திசையில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் சுமார் 140 அடி நிளமும் 15 அடி உயரமும் உள்ளது. இக்குகைத் தளம் சுவர்கள் வைத்துப் பல பிரிவுளாக பிரிக்கப்பட்டு உள்ளது. திரெளபதி கோயிலில் வெளிப் பகுதியின்மேற்பாகத்தில் 16 சமண தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கபட்டுள்ளன. சிலைகளின் கிழ் இச்சிலை செய்து வைத்துள்ளவர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள குகைத்தளத்தில் பஞசபாண்டவர் வனவாசத்தின்போது தங்கியதாக்க் கூறுகின்றனர். பஞ்சவரான பாண்டவர்கள் ஐவர் தங்கிய மலை என்று கருதி இதனை ஐவர் மலை என்று அழைக்கின்றன. இங்குள்ள குகைத் தளத்தைப் பஞ்சபாண்டவர் குகை என்று கூறிகின்றனர். ஆனால் இக்குகைத் தளம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சமண முனிவர்களின் உறைவிடமாகவும் சமணப் பள்ளியாகவும், வழிபாட்டு தளமாகவும் திகழ்ந்துள்ளது. குகைத்தளத்தின் முகப்பு பார்வையில் புடைப்பு சிற்பமாக வடிக்கபட்டுள்ள சமண தீர்த்தங்காரர் சிற்பங்களும், அவற்றின் அருகில் பொற்க்கபட்டுள்ள கிபி 9-10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் இதனை உறுதிப் படுத்துகின்றன. இங்குள்ள கல்வெட்டுகளில் இம்மலை அயிரை மலை என்றும் குறிப்பிடுகிறது. ஆயிரை மலை என்பது சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுபத்தில் சேர்ர்க்குறிய குன்றமாகக் கூறப்படுகிறது. பதிற்றுப்பத்தின் மூன்றாம்பத்தில் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலை கௌதமனார் என்ற புலவர் புகழ்ந்து பாடும்புர்து அயிரைமலை அவனுக்குரியதாக இருந்த்து என்கிறார். பகைவரைத் தடுத்து நிறுத்தும் உயரமான அயிரைமலைக்கு உரியவன் என்று கூறிகின்றார்.
     முனைடிகட விலங்கிய
     நேர்உயர் நெடுவரை அயிரை பொருந (பதிற்றுப்பத்து பா.21)
சங்கப்புலவர்கள் சேர அரசர்களைப் பாடும்போது அவர்களை அயிரைமலை போன்று நீடூழிவாழ வாழ்த்தியுள்ளனர் பதிற்றுபத்தில் செல்வகடுங்கோ வாழியாதனைக் கபிலரும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழாரும் அயிரைமலை போன்று நிலைத்து நின்று நீடுவாழ வாழ்த்திப் பாடியுள்ளனர்.அயிரை மலையில் சங்க்காபலத்தில் வெற்றியை தரும் கொற்றவை என்ற தாய் தெய்வத்தின் கோயில் இருந்துள்ளது. இதனை சேர மன்னர்கள் போற்றி வணங்கியுள்ளனர். குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் கொற்றவை குடிகொண்டுள்ள அயிரை மலையை போற்றி வழிபட்டான் என்று பதிற்றுபத்தில் பெருங்குன்றூர்கிழார் என்ற புலவர் கூறிகின்றார். கொற்றவை தெய்வத்திற்க்கு விழுப்புண்ணிலிருந்து சிதறிய குருதியை வீர்ர்கள் படைப்பார்கள் என்று அரிசில்கிழார் பதிற்றுபத்தில் கூறிப்பிடுகிறார். பதிற்றுபத்து பாடல்கள் மூலம் அயிரை மலை ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே கொற்றவை உரையும் மலையாக இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இம்மலையை இன்று ஐவர்மலை என்று கொங்கு நாட்டின் இருந்து வருகிறது. இம்மலையில் உள்ள பழமையான கல்வெட்டுகளும் இம்மலையை அயிரை மலை என்றும் கூறிப்பிடுவதால் இம்மலை பதிற்றுப்பத்து கூறும் அயிரை மலையாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது இம்மலைப் பகுதி வரண்டு காணப்படுகிறது. இன்றும் நீர் சுரக்கும் சுனை இம்மலையில் உள்ளது. கிபி 9-10 ஆம் நூற்றாண்டுகளில் அயிரை மலை சமணமுனிவர்களும் அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணப்பள்ளியாக உள்ளது. இப்பள்ளியில் சமணதீர்ந்தகாரன் உருவங்களும் அவர்களை காக்கும் இயக்கி இயக்கன் உருவங்களும் குகைத்தளத்தில் முகப்பில் உள்ள பாறையில் புடைப்பு சிற்பமாக செய்து வழிபடப்பட்டன. இம்மலையில் இருந்த தீர்த்தங்கார் அயிரைமலை தேவர் என்று அழைக்கப்பட்டார் பார்சுவநாதர் தீர்த்தங்காரார் ஐந்து தலைகளுடைய பாம்பு குடையின் கீழ் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றார். எஞ்சிய பெருபாலன சமண சிற்பங்கள் தாமரை மலர் மீது முக்குடையின் கீழே அர்த்தபரியங்காசனத்தில்  அமர்த்த நிலையில் காட்சியளிக்கின்றனர். பார்சுவ நாதர் என்றழைக்கப்பட்ட இருபத்து மூன்றாவது தீர்த்தங்கார் உருவங்கள் இங்கு சிறப்புடன் வழிபாடு செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டில் திருவயிரைப் பார்சுவபடாரர் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.இவரது இயக்கி அம்மன் அவ்வை என்றும் குறிப்பிடபடுகின்றாள்.சமண சமய இயக்கிக்குறிய பெயராக அவ்வை என்ற சொல்லை தமிழ் நிகண்டுகள் எடுத்து கூறிகின்றன. காலப்போக்கில் சமணம் அயிரை மலையிலிருந்து மறைந்து தற்போது த்ரௌபதி அம்மன் என்னும் கிராம தெய்வம் இங்குள்ள குகைத்தளங்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் மிக முக்கியமாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றன. பாண்டியர் வரலாற்றில் இரண்டாம் வரகுணபாண்டியனின் காலத்தை கணிப்பதற்க்கு மிக் முக்கிய கல்வெடாக கருதுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடும்  சக ஆண்டு 792 என்பதைக் கொண்டு வரகுணபாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டின் காலம் கிபி 870 என்று கணக்கிட்டு வரகுணபாண்டியனின் ஆட்சி கிபி 862 தொடங்குகிறது. இவ்வரகுணபாண்டியன் ஸ்ரீமார வல்லப்பனின் மகனாவன். சடைவர்மன் என்ற பட்டம் பண்டுவன். இன்று கொங்கு நாட்டில் சமண சமய மலை பள்ளிகளில் மிகவும் பழமையான சமண திரு உருவங்களையும் கல்வெட்டுகளையும் பெற்று திகழும் பெருமையுடையது. அயிரை மலை சமணப்பள்ளியை இதன் பெருமையை கருதி தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை பாதுகாக்கபட்ட வரலாற்று சின்னமாக இதனை எடுத்து பாதுகாக்கபட்டு வருகிறது. 15-1-2013 அன்று பொன்னுச்சாமி மற்றும் சதாசிவம் களப்பணிக்கு சென்று வந்தோம்.
மேற்க்கோள் நூல்கள்
திண்டுகல் மாவட்ட தொல்லியல் கையேடு
கொழும்ம் குமுரலிங்கம் ஐவர்மலை
பாண்டியர் வரலாறு – இராசசேகர தங்கமணி


                           

 பார்சுவ நாதர்

















 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. அருமையான தொகுப்பு...நான் சுமார் 10ஆண்டுகளுக்கு முன்பாக கொழுமம் எனும் கிராமத்தில் இருந்த சுமார் 90வயதுடைய பெரியவரிடம் உரையாடிய பொழுது....ஐவர் மலையில் சுமார் 1000 சமணர்கள் வாழ்ந்துவந்தால் இது ஆயிரவர் மலை என்றும் பிற்க்காலத்தில் மருவி ஐவர்மலையென்றானதும்..எதிரே உள்ள துரியோதணன் மலையானது ஆயிரம் சமணர்களுக்கு துரியாதீதன் எனும் நிலையை இந்த பெரியமலையில்தான் அடைந்ததால் இது துரியாதீதன் மலையென்றும் பிற்க்காலத்தில் துரியோதணன் மலையானதாகவும் அந்த பெரியவர் சொன்னார்...இந்த கருத்தும் உண்மையாக இருக்கலாம்...பொன்மயில்.உடுமலை...9865301833

    பதிலளிநீக்கு

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்